24 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணி வீரர்கள் உலககோப்பையில் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Bangladesh
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் போட்டியானது இன்று புனே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்துள்ளது. பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் தன்சின் ஹசன் 51 ரன்களையும், லிட்டன் தாஸ் 66 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய முகமதுல்லா 46 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய வங்கதேச அணியின் துவக்க வீரர்களான தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து 24 ஆண்டு கால சாதனை ஒன்றினை இந்திய அணிக்கு எதிராக முறியடித்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை உலக கோப்பை தொடர் போட்டிகளில் பங்களாதேஷ் அணி சார்பாக முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி 62 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்த வங்கதேச அணி இன்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஃபீல்டிங்கில் மாஸ் காட்டிய 2 இந்திய வீரர்கள்.. மெடலை அவருக்கு கொடுக்குமாறு.. ரெக்கமெண்ட் செய்த அம்பயர்

இந்த போட்டியின் போது பங்களாதேஷ் அணி 93 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச பாட்னர்ஷிப் பட்டியலிலும் இந்த பார்ட்னர்ஷிப் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement