ஃபீல்டிங்கில் மாஸ் காட்டிய 2 இந்திய வீரர்கள்.. மெடலை அவருக்கு கொடுக்குமாறு.. ரெக்கமெண்ட் செய்த அம்பயர்

India Fielding
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புனேவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதற்கிடையே ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறிய நிலையில் விராட் கோலி பந்து வீசியது போட்டியில் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வங்கதேசம் ஓபனிங் ஜோடி 93 ரன்கள் ஓப்பனிங் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த போது தன்சித் ஹசனை 51 ரன்களில் குல்தீப் யாதவ் அவுட்டாக்க அடுத்ததாக வந்த மெஹதி ஹசன் 3 ரன்களில் சிராஜ் வேகத்தில் ராகுலின் அற்புதமான ஒற்றைக்கை கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சவாலை கொடுத்த லிட்டன் தாஸ் 66 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கிய நிலையில் அடுத்ததாக வந்து நிதானமாக விளையாட முயற்சித்த தவ்ஹீத் ஹ்ரிடாய் தாக்கூர் வேகத்தில் 16 ரன்களில் நடையை கட்டினார். அதனால் சரிவை சந்தித்த அந்த அணிக்கு சீனியர் வீரர்கள் முஸ்பிக்கர் ரஹீம் மற்றும் முகமதுல்லா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் அதில் பும்ரா வீசிய 43வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட ரஹீம் கொடுத்த அற்புதமான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தாவி பிடித்ததால் 38 ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார். அப்போது இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியின் நடுவில் கொடுக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று ரவீந்திர ஜடேஜா சைகை செய்த போது ஃபீல்டிங் பயிற்சிசாளர் கைதட்டி பாராட்டினார்.

- Advertisement -

அதை விட பவுண்டரி எல்லையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த 4வது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் அந்த மெடலை ஜடேஜாவுக்கு கொடுங்கள் என்று ஃபீல்டிங் பயிற்சியாளரிடம் சொன்னார். மறுபுறம் ஏற்கனவே விக்கெட் கீப்பர் ராகுலும் அபாரமான கேட்ச் பிடித்ததால் இன்று இந்த போட்டியின் முடிவில் யாருக்கு அந்த யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் பயிற்சியாளருக்கு ஏற்படும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.. ஹர்டிக் பாண்டியா மேற்கொண்டு விளையாடுவாரா? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

இறுதியில் முகமதுல்லா போராடி 46 (36) ரன்கள் எடுத்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேசம் 256 கண்கள் மட்டும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த வங்கதேசத்தை 300 ரன்கள் தொட விடாத அளவுக்கு இந்தியாவின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement