இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.. ஹர்டிக் பாண்டியா மேற்கொண்டு விளையாடுவாரா? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மதியம் 2 மணிக்கு துவங்கிய 17வது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும் அப்போது 9வது ஓவரின் வீசிய ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களை வீசியதும் துரதிஷ்டவசமாக கால் பகுதியில் காயத்தை சந்தித்தார். அப்போது மருத்துவர்கள் வந்து சோதித்து முதலுதவி கொடுத்த போதிலும் வலி குறையாத காரணத்தால் அவர் பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:
அதைத் தொடர்ந்து அவர் வீசி வேண்டிய எஞ்சிய 3 பந்துகளை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வீசியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் அரிதாகவே பந்து வீசும் அவர் கடந்த 2017இல் கொழும்புவில் நடைபெற்ற போட்டிக்கு பின் 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்காக பந்து பந்து வீசினார்.

அந்த நிலைமையில் கணுக்காலில் சந்தித்த காயத்தை சோதனை செய்வதற்காக ஹர்திக் பாண்டியா மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதனால் அவருடைய காயத்தின் நிலைமை என்ன மேற்கொண்டு விளையாடுவாரா என்ற குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காயத்தின் தன்மையை சோதனை செய்வதற்காக ஹர்திக் பாண்டியா ஸ்கேன் செய்வதற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பிசிசிஐ ட்விட்டரில் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இப்போட்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கொண்டு அவர் பவுலிங் அல்லது ஃபீல்டிங் செய்ய மாட்டார் என்றும் தெரிய வருகிறது. மேலும் காயம் பெரிய அளவில் இல்லை என்றால் மட்டுமே தேவைப்பட்டால் பேட்டிங் செய்வதற்காக ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்பதும் தெரிய வந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தக்கூடிய ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முதன்மை ஆல் ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இதையும் படிங்க: முதல் முறையாக தடுமாறிய இந்தியா.. பாண்டியா காயம்.. 6 ஆண்டுக்கு பின் அரிதாக பந்து வீசிய கிங் கோலி

எனவே அவர் விரைவாக குணமடைந்து இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் சோதனையின் முடிவில் தான் காயத்தின் முழுமையான விவரங்கள் மற்றும் பாண்டியா அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை காயத்தால் அவர் சில போட்டிகளில் விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement