முதல் முறையாக தடுமாறிய இந்தியா.. பாண்டியா காயம்.. 6 ஆண்டுக்கு பின் அரிதாக பந்து வீசிய கிங் கோலி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அதில் ஏற்கனவே 3 போட்டிகளில் தொடர் வெற்றிகள் பெற்று வலுவான நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் பேட்டிங்கை துவக்கிய வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் மற்றும் டன்சித் ஹசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த நிலைமையில் 9வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 3வது பந்தை வீசிய பின் காயத்தை காயத்தை சந்தித்தார். அதனால் உடனடியாக மருத்துவர்கள் வந்து சோதித்த தற்காலிகமான முதலுதவி வழங்கினார்கள்.

- Advertisement -

திணறுகிறதா இந்தியா:
இருப்பினும் அப்போதும் வலி குறையாத காரணத்தால் ஹர்திக் பாண்டியா பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருடைய காயம் மற்றும் மேற்கொண்டு விளையாடுவாரா என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் பாண்டியா வீசிய ஓவரின் கடைசி 3 பந்துகளை வீசுவதற்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வந்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.

ஏனெனில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அந்த வீசியதை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்லலாம். சொல்லப்போனால் கடைசியாக கொழும்புவில் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் பந்து வீசிய அவர் 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்போட்டியில் பந்து வீசினார்.

- Advertisement -

அந்த 3 பந்துகளில் 2 ரன்கள் கொடுத்த அவர் மேற்கொண்டு பந்து வீசாத நிலையில் தொடர்ந்து எஞ்சிய வீரர்கள் பந்து வீசினார்கள். இருப்பினும் பும்ரா உள்ளிட்ட அனைத்து பவுலர்களும் சிறப்பாக எதிர்கொண்ட வங்கதேச ஓப்பனிங் ஜோடி பவர் பிளே முடிந்தும் விக்கெட்டை கொடுக்காமல் சவாலை கொடுத்தது. அதனால் இந்த உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்திய பவுலர்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை எடுக்காமல் இப்போட்டியில் தடுமாற்றத்தை சந்தித்தனர்.

இதையும் படிங்க:

இருப்பினும் பவர் பிளே முடிந்ததும் சுழலை துவங்கிய குல்தீப் யாதவ் அதிரடியாக விளையாடி சவாலை கொடுத்த ஹசனை 51 (43) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் சற்று முன் வரை வங்கதேசம் 18 ஓவரில் 104/1 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் குவிக்கும் முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement