241 ரன்ஸ்.. இந்த ஸ்ட்ரைக் ரேட் போதுமா? பஞ்சாப்பை விளாசிய கிங் கோலி.. ரோஹித், வார்னரை முந்தி 2 சாதனை

PBKS vs RCB
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்பதாம் தேதி இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் 58வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 7, 8வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் பஃப் டு பிளேஸிஸை 9 (7) ரன்களில் அவுட்டாக்கிய கவேரப்பா அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸை 12 (7) ரன்களில் காலி செய்தார். இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஜத் படிடார் பஞ்சாப் பவுலர்களை பந்தாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55 (23) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டிய கிங் கோலி:
அப்போது மழை வந்ததால் போட்டி கொஞ்சம் நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பவுலர்களை தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய விராட் கோலியும் அரை சதமடித்து அசத்தினர். அவருக்கு அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்திய விராட் கோலி 4வது 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 6 சிக்சருடன் 92 (48) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் சேர்த்து பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்க்ளோ கடந்த விராட் கோலி ஏற்கனவே சென்னை மற்றும் டெல்லி அணிக்கு எதிராகவும் தலா 1000+ ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தலா 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மெகா சாதனையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் 2 அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அது போக இந்த வருடம் 634 ரன்கள் அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக (4) முறை ஒரு சீசனில் 600 ரன்கள் அடித்த வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் கேஎல் ராகுலும் 4 முறை 600+ ரன்கள் அடித்துள்ளார். அதை விட இந்த வருடம் அரை சதம், சதம் போன்ற சொந்த சாதனைக்காக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் சுயநலத்துடன் விராட் கோலி விளையாடுவதாக விமர்சனங்கள் காணப்பட்டன.

இதையும் படிங்க: 2021லிருந்தே ரிப்பீட்டாகுது.. ஆதரவு கொடுத்தற்கு செஞ்சுட்டீங்க.. அவரின் ஈகோ மும்பையை தோற்கடித்தது.. ஏபிடி கருத்து

ஆனால் இந்த போட்டியில் 92 ரன்களை 195.74 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய விராட் கோலி தம்முடைய தரத்தையும் தாம் எப்போதுமே அணிக்காக விளையாடுபவன் என்பதை நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேமரூன் கிரீன் 46 (27), தினேஷ் கார்த்திக் 18 (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் பெங்களூரு 241/7 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கவேரப்பா 2, ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement