பாண்டியாவை குறை சொல்வதில் அர்த்தமில்ல.. என் மேலயும் தப்பிருக்கு.. மும்பை தோல்வி பற்றி ரோஹித் வருத்தம்

Rohit Sharma MI 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. மும்பையின் இந்த தோல்விக்கு ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது

ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கழற்றி விட்டது மும்பை ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. அப்படி சொந்த ரசிகர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடிய பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை சரியாக எடுக்கவில்லை. அதனால் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே மும்பை படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது.

- Advertisement -

ரோஹித் வருத்தம்:
இந்நிலையில் இந்த வருடம் தாங்கள் வகுத்த திட்டங்கள் தங்கள் வழியில் செல்லவில்லை என்று ரோகித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே பாண்டியாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தாமும் பேட்டிங்கில் அசத்தவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“எங்களுடைய சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. இந்த தோல்விக்காக எங்களை நாங்களே குறை சொல்கிறோம். ஏனெனில் இந்த சீசனில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். குறிப்பாக நாங்கள் வெற்றி பெற வேண்டிய பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தோம். ஆனால் அதுவே ஐபிஎல் தொடரின் இயற்கையாகும். வெற்றியை நெருங்கி வரும் போது நீங்கள் அதைக் கண்டிப்பாக பிடித்துக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“ஒரு பேட்ஸ்மேனாக நானும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை என்பதை அறிவேன். ஆனால் இத்தனை வருடங்கள் விளையாடிய பின்பும் அதைப் பற்றி நான் அதிகமாக சிந்தித்தால் என்னால் சிறப்பாக விளையாட முடியாது என்பது எனக்கு தெரியும். எனவே நல்ல மனநிலையில் தொடர்ந்து பயிற்சிகளை செய்து என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு முயற்சிக்கிறேன். இதைத் தான் நான் செய்கிறேன்” என்று ஜியோ சினிமா சேனலில் கூறினார்.

இதையும் படிங்க: சுயநலமே இல்லாத பையன்.. அபிஷேக் சர்மாவுக்கு கண்டிப்பாக அந்த சான்ஸ் கிடைக்கும்.. ராயுடு பாராட்டு

இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் அந்த தொடரில் ரோஹித் சர்மா அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய அவர் 10 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

Advertisement