ஐ.பி.எல் 2024 பைனலில் விளையாடப்போகும் 2 அணிகள் இதுதான்.. தனது கணிப்பை கூறிய – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மிக சுவாரஸ்யமான பல்வேறு திருப்புமுனைகளோடு நடைபெற்று வரும் இந்த தொடர் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய காத்திருக்கிறது. இந்த தொடருக்கான ப்ளே ஆப் சுற்றும் போட்டிகளில் விளையாட :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது கடைசியில் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள வேளையில் கடந்த 16 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருக்கும் அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஏக்கமாகவும் இருந்து வருகிறது.

அதோடு விராட் கோலியும் இந்த தொடரில் வழக்கத்தை விட கூடுதல் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருவதால் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு பெங்களூரு அணியே கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பெங்களூரு அணியின் தற்போதைய பார்ம் காரணமாக அந்த அணியும் கொல்கத்தா அணியும் தான் பைனலுக்கு நுழைவார்கள். அந்த இரு அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் மிக சுவாரசியமான ஒரு முடிவு நமக்காக காத்திருக்கும்.

இதையும் படிங்க : பாண்டியாவை குறை சொல்வதில் அர்த்தமில்ல.. என் மேலயும் தப்பிருக்கு.. மும்பை தோல்வி பற்றி ரோஹித் வருத்தம்

பெங்களூரு அணி இம்முறை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு பெங்களூரு அணியின் வீரர்கள் முழு உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர் என்று ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement