2021லிருந்தே ரிப்பீட்டாகுது.. ஆதரவு கொடுத்தற்கு செஞ்சுட்டீங்க.. அவரின் ஈகோ மும்பையை தோற்கடித்தது.. ஏபிடி கருத்து

Ab De Villiers 3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனிலிருந்து மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு பும்ரா, சூரியகுமார் போன்ற சக வீரர்கள் இன்ஸ்டாகிராமில் மறைமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மும்பை ரசிகர்கள் நேரடியாக எதிர்ப்பை தெரிவித்தனர்.

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பேட்டிங் பவுலிங் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்டியா கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை சரியாக எடுக்கவில்லை. அதனால் 12 போட்டிகளில் 8 தோல்விகளை பதிவு செய்த மும்பை லீக் சுற்றுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இந்நிலையில் இந்த வருடம் மும்பை கிரிக்கெட் அணி குறைந்தது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தாம் ஆரம்பத்தில் கணிப்பு வெளியிட்டு ஆதரித்ததாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஈகோ கேப்டன்ஷிப்:
ஆனால் 2021 முதல் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத மும்பை இம்முறையும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் தோனி போல அமைதியாக செயல்படுகிறேன் என்ற ஈகோவுடன் பாண்டியா கேப்டனாக செயல்பட்டது மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“மும்பை மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று நான் ஆதரவு கொடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை? எது தவறானது. அவர்கள் 2021இல் 5, 2022இல் 10, 2023இல், 2024இல் 9வது இடத்தை மட்டுமே பிடித்தனர். ரோகித் சர்மா நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளதால் எனக்கு இது புதிதல்ல என்று சொல்கிறார். அவர் சொன்னதை நீங்கள் கொஞ்சம் நன்றாக படித்துப் பார்க்க வேண்டும்”

- Advertisement -

“ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் ஸ்டைல் மிகவும் துணிச்சலானது. ஒருவிதத்தில் அது ஈகோவாக இருந்தது. அவர் களத்தில் நடந்து கொண்ட விதம் உண்மையானது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் இப்படிதான் செயல்படுவேன் என்று அவர் முடிவெடுத்துள்ளார். கிட்டத்தட்ட தோனி போல அமைதியாக சேர்ந்து விளையாடுவோம் என்பது போல் அவர் செயல்பட்டார். ஆனால் உங்களுடைய அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும் போது அதை ஏற்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: லக்னோ கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்யும் கேஎல் ராகுல்? 2025இல் நிகழும் ட்விஸ்ட்.. வெளியான ரிப்போர்ட்

“குஜராத் இளம் அணியாக இருந்ததால் பாண்டியாவின் அணுகுமுறை வேலை செய்தது. அனுபவமற்ற வீரர்கள் அவருடைய கேப்டன்ஷிப்பை விரும்புவார்கள்” என்று கூறினார். அதாவது ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறை அனுபவமற்ற குஜராத் அணியில் வேலை செய்யும். ஆனால் ரோஹித், பும்ரா போன்ற சீனியர்களை கொண்ட மும்பை அணியில் வேலையாகாது என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement