கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ரசிகர்களின் அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று தோனி அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 17-வது ஐபிஎல் தொடரின் முழு தொடரிலும் பங்கேற்று விளையாடியிருந்தார். அதோடு பினிஷராகவும் சென்னை அணிக்காக அசத்தியிருந்தார்.
இந்நிலையில் 42 வயதான தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்து சென்னை அணி பிளே ஆப் சுற்றிக்கு முன்னேறாமல் வெளியேறியதால் அந்த போட்டியிலேயே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் தற்போது தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றடைந்து விட்டார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் தோனி சிஎஸ்கே நிர்வாகிகளிடம் தனது ஓய்வு குறித்து என்ன செய்தியை கூறியிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் சிஎஸ்கே நிர்வாகிகளிடம் பேசியுள்ள தோனி :
அவர்களிடம் இன்னும் ஒரு சில மாதங்கள் (3 மாதங்கள்) கழித்து என்னுடைய ஓய்வு குறித்தான முடிவை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதுவரை எனக்கு அவகாசம் வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை அவரை தெரிவிப்பார்.
இதையும் படிங்க : 708 ரன்ஸ்.. கிறிஸ் கெயில் தனித்துவ சாதனையை தூளாக்கிய கிங் கோலி.. ஆல் டைம் சாதனையும் சமன்
ஏனெனில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் 2025 தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் அதனை எல்லாம் கருத்தில் கொண்டு தோனி தனது ஓய்வு முடிவை
அறிவிப்பார் என்று தெரிகிறது.



