லக்னோ கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்யும் கேஎல் ராகுல்? 2025இல் நிகழும் ட்விஸ்ட்.. வெளியான ரிப்போர்ட்

KL Rahul 4
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வி பதிவு செய்துள்ளது. குறிப்பாக மே எட்டாம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ படுதோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஸ் பதோனி 55* ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் துரத்திய ஹைதராபாத்துக்கு வேறு ஏதோ பிட்ச்சில் விளையாடுவது போல் அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 75*, டிராவிஸ் ஹெட் 89* ரன்கள் விளாசி 9.4 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் தோல்வியை சந்தித்த லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்த 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

வெளியான ரிப்போர்ட்:
அதன் காரணமாக போட்டி முடிந்ததும் கேப்டன் கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா கோபத்துடன் திட்டுவது போல் பேசினார். குறிப்பாக ஆரம்பத்திலேயே மார்கஸ் ஸ்டோனிஸ் 5, டீ காக் 3 ரன்களில் அவுட்டானதால் நிதானமான விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 29 (33) ரன்கள் எடுத்தார். அவருடைய மெதுவான இன்னிங்ஸ் தோல்விக்கு முக்கிய காரணமானது.

எனவே ஹைதராபாத் அப்படி விளையாடிய அதே பிட்ச்சில் நீங்கள் இப்படி விளையாடலாமா? என்ற வகையில் ராகுலை அவர் திட்டியதாக தெரிகிறது. அதற்கு என்ன தான் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் ராகுலை இப்படி திட்டலாமா என்று அவரை ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் சுயமரியாத இருந்தால் லக்னோ அணியிலிருந்து இந்த வருடத்துடன் வெளியேறுங்கள் என்றும் ராகுலுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் லக்னோ அணியின் கடைசி 2 போட்டிகளில் கேஎல் ராகுல் சாதாரண வீரராக விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் மெகா ஏலத்தில் அவரை லக்னோ நிர்வாகம் தக்க வைக்க விரும்பவில்லை என்றும் தெரிய வருகிறது. இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத லக்னோ அணியின் நிர்வாகி கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்.. தப்பு பண்ணிட்டீங்க.. மும்பையின் தோல்வி பற்றி வாசிம் அக்ரம்

“டெல்லிக்கு எதிரான லக்னோ அணியின் அடுத்த போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இடைவெளி இருக்கிறது. தற்போதைய நிலைமையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை கடைசி 2 போட்டிகளில் ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினால் அதற்காக லக்னோ நிர்வாகம் கவலைப்படாது” என்று கூறினார். சமீபத்திய வருடங்களாகவே ராகுல் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் அடுத்த வருடத்துடன் அவரை லக்னோ கழற்றி விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement