இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்.. தப்பு பண்ணிட்டீங்க.. மும்பையின் தோல்வி பற்றி வாசிம் அக்ரம்

Wasim Akram 6
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. குறிப்பாக இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் மே 8ஆம் தேதி லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது.

அதன் காரணமாக மும்பை முதல் அணியாக வெளியேறியது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்ற மும்பை வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. அதனால் இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறிய ரோகித் சர்மா நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக முன்னேறியுள்ளார்.

- Advertisement -

மும்பையின் தவறு:
அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கி கேப்டனாக அறிவித்தது. அதற்கு பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் இன்ஸ்டாகிராமில் மறைமுகமான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மும்பை ரசிகர்கள் நேரடியான எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போதிலிருந்தே பாண்டியா தலைமையில் எந்த வீரர்களும் ஒற்றுமையுடன் விளையாடாதது மும்பை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

போதாக்குறைக்கு முதல் போட்டியிலேயே பதவி கைக்கு வந்ததும் ரோகித்தை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார். அதனால் மும்பை ரசிகர்களே தங்களுடைய கேப்டன் பாண்டியாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்டியா கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுக்கத் தவறியது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

இந்நிலையில் 2024 சீசன் துவங்குவதற்கு முன்பாக கடைசி நேரத்தில் ரோஹித்தை கழற்றி விட்டதே மும்பையின் தோல்விக்கு காரணம் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் ஒரு அணியாக நிறைய கடந்து வர வேண்டும். கடைசி நிமிடத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பில் அவர்கள் செய்த மாற்றமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை அது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தால் ரோஹித் சர்மா சாதாரண வீரராக விளையாடி தாமாக ஓய்வெடுக்கிறேன் என்று கூறியிருப்பார்”

இதையும் படிங்க: 2003லயே கங்குலி சொன்னாரு.. ஹைதராபாத் அதிரடிக்கு இதான் காரணம்.. பலரின் கேரியரை முடிக்குறாங்க.. கைப் கருத்து

“ரோகித் சர்மா தற்போது இந்தியாவின் கேப்டனாக இருக்கிறார். எனவே ஹர்திக் பாண்டியா மும்பை கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் அடுத்த வருடம் கேப்டனாக முடித்து விட்டேன் இனிமேல் பாண்டியா செயல்படுவார் என்று ரோகித் சொல்லியிருப்பார். அப்படி நடந்திருந்தால் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள். எனவே இந்த முடிவு மும்பைக்கு சரியாக செல்லவில்லை” என்று கூறினார்.

Advertisement