2003லயே கங்குலி சொன்னாரு.. ஹைதராபாத் அதிரடிக்கு இதான் காரணம்.. பலரின் கேரியரை முடிக்குறாங்க.. கைப் கருத்து

Mohammad Kaif 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து 10 அணிகளும் போட்டியிட்டு இருக்கின்றன. ஆனால் அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டும் எதிரணிகளுக்கு கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கி ஆபத்தான அணியாக செயல்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் விளாசிய ஹைதராபாத் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணியாக வரலாறு படைத்தது.

மேலும் டெல்லிக்கு எதிராக முதல் 5 ஓவரில் 100 ரன்கள் அடித்த ஹைதெராபாத் ஒரு டி20 போட்டியில் அதிவேகமாக சதம்டித்த அணி என்ற உலக சாதனை படைத்தது. அதே போட்டியில் 6 ஓவரில் 125 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஒரு டி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது. அதே வேகத்தில் லக்னோவுக்கு எதிராக 166 ரன்களை வெறும் 9.4 ஓவரில் ஹைதராபாத் சேசிங் செய்தது.

- Advertisement -

முரட்டு பேட்டிங்:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 150+ இலக்கை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையும் ஹைதராபாத் படைத்தது. குறிப்பாக அந்தப் போட்டியில் லக்னோ மிகவும் தடுமாறி 165 ரன்கள் குவித்ததால் பிட்ச் ஸ்லோவாக இருப்பதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் 9.4 ஓவரில் சேசிங் செய்த டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஆகியோர் பிட்ச்சுக்கும் ஆட்டத்துக்கும் சம்மந்தமில்லை என்று நிரூபித்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் – ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஹைதராபாத் அணியில் இருப்பதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அவர்களால் அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியர்களின் அணுகுமுறை நுழைந்துள்ளதே ஹைதெராபாத்தின் இந்த அதிரடிக்கு காரணம் என்று கைஃப் தெரிவித்துள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா அதிரடியால் பல பவுலர்களின் கேரியர் முடிவதாகவும் கவலை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பட் கமின்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன். டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய வீரர். எனவே இது ஆஸ்திரேலியர்களின் அணுகுமுறை. இந்தியா – ஆஸ்திரேலியா 2003 உலகக் கோப்பை ஃபைனல் எனக்கு நினைவிருக்கிறது. அதில் காலசூழ்நிலை ஈரப்பதமாக இருந்தது. நாங்கள் டாஸ் வென்றோம். அப்போது பந்து ஸ்விங் ஆகியிருந்தால் நாம் வென்றிருப்போம் என்று கங்குலி சொன்னார். அது இல்லாததால் ஆஸ்திரேலியா 360 ரன்கள் அடித்தது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் 6 வருட வரலாற்று சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ

“இது முதல் முறையாக நடக்கவில்லை. இந்த ஐபிஎல் ஐபிஎல் முழுவதும் ஹெட் – அபிஷேக்கை பவுலர்களால் நிறுத்த முடியவில்லை. இது பல பவுலர்களின் கேரியரை முடிக்கும் பேட்டிங். ஏனெனில் இப்படி அடி வாங்கும் போது அந்த பவுலர் அடுத்த போட்டியில் நீக்கப்படுவார். அவர்கள் அப்படி பேட்டிங் செய்கின்றனர்” என்று கூறினார்

Advertisement