சி.எஸ்.கே அணியின் 6 வருட வரலாற்று சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ

CSK-vs-SRH
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை ருசித்ததோடு இந்த தொடருக்கான புள்ளி பட்டியலில் தங்களது ஏழாவது வெற்றியையும் பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்னும் சன் ரைசர்ஸ் அணிக்கு இரண்டு லீக் போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் எதுவும் இழக்காமல் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் ஷர்மா 28 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 75 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 89 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்த அசத்தலான சேசிங்கின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்தியிருந்த வேளையில் 6 வருட சிஎஸ்கே அணியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஒரே சீசனில் மொத்தமாக 145 சிக்ஸர்களை விளாசி இருந்ததே ஒரு அணி ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச சிக்சர்களின் எண்ணிக்கையாக இருந்தது.

இதையும் படிங்க : கடைசி 2 போட்டியில் விளையாடும் முன்னரே ஐ.பி.எல் 2024-ல் இருந்து வெளியேற்றப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

ஆனால் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் அடித்த 14 சிக்ஸர்களோடு சேர்த்து இந்த தொடரில் இதுவரை அவர்கள் விளையாடிய 12 போட்டியிலேயே 146 சிக்ஸர்கள் அடித்து அந்த எண்ணிக்கையை முறியடித்துள்ளனர். அதுமட்டுமின்றி லீக் சுற்றில் 2 போட்டிகளும், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதினால் நிச்சயம் அவர்கள் இந்த தொடரில் கிட்டத்தட்ட 175 முதல் 180 சிக்ஸர்கள் வரை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Advertisement