கடைசி 2 போட்டியில் விளையாடும் முன்னரே ஐ.பி.எல் 2024-ல் இருந்து வெளியேற்றப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

MI
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பிளேஆப் சுற்றுக்கு செல்லப்போகும் நான்கு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் இவ்வார இறுதியில் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இவ்வேளையில் பெரிய விமர்சனங்களுக்கு மத்தியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதியாக உள்ள இரண்டு போட்டிகளில் விளையாடாமலேயே பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகாரபூர்வமாக இழந்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை 12 லீக் போட்டிகளில் விளையாடி 8 தோல்வி மற்றும் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று 8 புள்ளிகளை பெற்றிருக்கும் வேளையில் இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் 12 புள்ளிகளை தான் எட்ட முடியும்.

இதன்காரணமாக இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டியின் போது :

- Advertisement -

166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய சன்ரைசர்ஸ் அணியானது 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கினை பூர்த்தி செய்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மும்பை அணியின் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோனது.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ முடிஞ்சதும்.. அந்த 2 பேருக்கு போட்டியா அபிஷேக் சர்மா வந்துட்டாரு.. மைக் ஹெசன் பாராட்டு

கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது சிறப்பாக செயல்பட்டும் இந்த ஆண்டு கேப்டன்சி மாற்றம் நடைபெற்றது. அப்படி பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வந்த வேளையில் தற்போது பிளேஆப் வாய்ப்பையும் இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement