2024 டி20 உ.கோ முடிஞ்சதும்.. அந்த 2 பேருக்கு போட்டியா அபிஷேக் சர்மா வந்துட்டாரு.. மைக் ஹெசன் பாராட்டு

Mike Hesson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மே எட்டாம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்யாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ ஆயுஷ் படோனி 55*, நிக்கோலஸ் பூரான் 48* ரன்கள் எடுத்த உதவியுடன் 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஹைதராபாத் அணிக்கு வேறு ஏதோ பிட்ச்சில் விளையாடுவது போல் லக்னோ பவுலர்களை சூறையாடிய அபிஷேக் ஷர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் 7வது வெற்றியைப் பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னையை முந்தி சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

போட்டிக்கு வரும் அபிஷேக்:
இந்நிலையில் இப்போட்டியில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75* (28) ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பார் என்று முன்னாள் ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு போட்டியாக அபிஷேக் வருவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“பவர் பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. வேகத்திற்கு எதிராகவும் அவர் பெரியளவில் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். தரமான வீரரான அவர் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்கக் கூடியவர். எனவே உலகக் கோப்பை முடித்ததும் அவர் இந்திய அணியில் சில மாற்றங்களை செய்யது துவங்குவார். குறிப்பாக ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரின் இடங்களில் அவர் மாற்றத்தை ஏற்படுத்தலாம்”

- Advertisement -

“நியாயமாக பேச வேண்டுமெனில் இந்திய அணியில் நிறைய பெயர்கள் உள்ளன. ஆனால் அவர்களையெல்லாம் தாண்டி அபிஷேக் சர்மா இந்திய அணியில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார். முன்னதாக கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா ஆரம்பக் காலங்களில் பெரிய வாய்ப்பை பெறவில்லை. அந்த நிலையில் 2022 முதல் ஹைதராபாத் அணியில் ஓரளவு நிலையான வாய்ப்பு பெறும் அவர் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகளில் 1294 ரன்களை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இப்போவும் கெட்டுப்போகல.. 2024 டி20 உ.கோ தொடருக்கு இந்த தங்கத்தை கொண்டு போங்க.. ஹர்பஜன் கோரிக்கை

குறிப்பாக 2022 சீசனில் 426 ரன்கள் அடித்த அவர் இந்த வருடம் 12 போட்டிகளில் 401* ரன்கள் குவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2024 உலகக் கோப்பை முடிந்ததும் டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒருவராக அபிஷேக் ஷர்மாவும் ஒருவராக இருப்பார் என்று நம்பலாம்.

Advertisement