கவுதம் கம்பீரை இந்திய அணியின் கோச்சாக பொறுப்பேற்கும்படி அழைப்பு விடுத்துள்ள பி.சி.சி.ஐ – நடந்தது என்ன?

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிகளான ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காததால் அவருடைய பதவிக்கு மாற்று நபரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ உள்ளது.

அதன்படி இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வேளையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முன்னாள் வீரர்கள் இந்த இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த விண்ணப்பமானது மே 27-ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் அதன் பின்னர் பி.சி.சி.ஐ-யின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய பயிற்சியாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மேலும் இந்த புதிய பயிற்சியாளர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2027-ஆம் ஆண்டு வரை பணியாற்றலாம் எனவும் டி20 உலகக்கோப்பை முடிந்த உடனே புதிய பயிற்சியாளர் நியமனம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னாள் வீரர்கள் இந்த பதவிக்காக முயற்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் பி.சி.சி.ஐ தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வி.வி.எஸ் லக்ஷ்மணன் ஆகியோரை புதிய பயிற்சியாளராக வரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் மேலும் ஒரு நபராக தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்து வரும் கௌதம் கம்பீரையும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : பெங்களுருவில் இன்றிரவு 71 சதவீதம் மழைக்கு வாய்ப்பு.. ஆனாலும் முன்னேற்பாடுகளை பலப்படுத்திய – சின்னசாமி மைதான நிர்வாகம்

ஏனெனில் கம்பீரின் தலைமையில் ஏற்கனவே கொல்கத்தா அணி இரண்டு முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியதோடு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணி இவரது வழிகாட்டுதலின் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரை புதிய பயிற்சிசாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement