இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள வேளையில் எஞ்சியிருக்கும் நான்காவது இடத்திற்கான போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஆண்களுக்கு இடையே இருந்து வருகிறது.
அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முக்கிய லீக் போட்டியானது இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு விளையாட தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு சென்னை அணி வெற்றி பெற்றால் எளிதில் அடுத்த சுற்றுக்கு நுழையும். ஆனால் ஆர்.சி.பி அணிக்கு வெற்றி பெற்றாலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த வகையில் ஆர்.சி.பி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும்.
இந்நிலையில் இன்று சின்னசாமி மைதானத்தில் 71% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிக்கை வெளியாகி உள்ளதால் போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை 71% மழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு மாலை நேரத்தில் 55 சதவீதத்திற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 100% மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதனால் இந்த போட்டி திட்டமிடப்படி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் பெங்களூரு மைதான நிர்வாகம் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை விரைவாக வெளியேற்றும் வகையில் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்திய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அதை மட்டும் செய்ங்க பாய் ப்ளீஸ்.. கேமராமேனிடம் கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்த ரோஹித்
அதோடு எவ்வளவு மழை பெய்தாலும் நிச்சயம் சில நிமிடங்களில் மைதானத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் போட்டியில் முழுவதுமாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.