ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது. இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அந்த முடிவுக்கு மும்பை ரசிகர்களே இப்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் விளையாடிய மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பதிவு செய்து பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக கேப்டன்ஷிப் கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தினார். அந்த நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
கும்பிட்ட ரோஹித்:
ஆனால் அப்படிப்பட்ட கோட்பாட்டை கொண்ட அவரை வலுக்கட்டாயமாக பாண்டியா தலைமையிலான மும்பை அணி இம்பேக்ட் வீரராக களமிறக்கியது. அந்த வகையில் அடுத்தடுத்து அவமானப்படுத்தி வருவதால் மும்பை அணியிலிருந்து வெளியேறி ரோஹித் வேறு அணியில் விளையாட வேண்டுமென ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் விரும்புகின்றனர். அதன் உச்சமாக அடுத்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேறி ரோஹித் கொல்கத்தா அணியில் விளையாடுவார் என்று உணர்வாதக வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
அந்த சூழ்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மழை பெய்தது. அப்போது அந்த அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்ற ரோகித் சர்மா கொல்கத்தா வீரர்களுடன் மணிகணக்கில் பேசினார். அத்துடன் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் அவர் நீண்ட நேரம் பேசினார். குறிப்பாக “இங்கே அனைத்தும் ஒவ்வொன்றாக மாறி வருகிறது. என்ன நடந்தாலும் இது நான் கட்டிய கோயில். எது நடந்தாலும் இதுவே எனக்கு கடைசி” என்று அவரிடம் ரோஹித் கூறிய வீடியோ வைரலானது.
அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக ரோகித் கொல்கத்தா அணிக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் பேசத் துவங்கினர். இருப்பினும் அதை கொல்கத்தா அணியின் இயக்குனர் வெங்கி மைசூர் மறுத்தார். அந்த சூழ்நிலையில் நேற்று லக்னோ – மும்பை மோதிய போட்டி நடைபெற்றது. அதில் தவால் குல்கர்னி போன்ற தனது நட்பு வீரர்களுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: அதை மட்டும் செய்யல்லன்னா.. சிஎஸ்கே அணிக்கு வாங்குறோம்ன்னு சத்தியம் கேட்டேன்.. டு பிளேஸிஸ் பற்றி ருதுராஜ்
அதை கேமராமேன் அருகே சென்று படம் பிடித்தார். அப்போது ரோகித் சர்மா கையெடுத்து கும்பிட்டு. “தயவு செய்து ஆடியோ ரெக்கார்டிங்கை நிறுத்துங்கள். ஏற்கனவே வெளியிட ஒரு ஆடியோ என்னை மிகப் பெரிய பிரச்சனையில் தள்ளியுள்ளது” என்று கேமராமேனிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெறுவதால் மும்பை அணியிலிருந்து ரோகித் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



