அதை மட்டும் செய்யல்லன்னா.. சிஎஸ்கே அணிக்கு வாங்குறோம்ன்னு சத்தியம் கேட்டேன்.. டு பிளேஸிஸ் பற்றி ருதுராஜ்

Ruturaj CSK 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டிக்கு ஒட்டுமொத்த ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பெங்களூரு நகரில் மே 18ஆம் தேதி நடைபெற உள்ள அந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெல்லும் அணி கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத்தை தொடர்ந்து 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அதனால் அப்போட்டியில் வென்று கோப்பையை தக்கவைக்கும் பயணத்தில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறுமா அல்லது முதல் கோப்பையை வெல்லும் பயணத்தில் பெங்களூரு ஒரு படி முன்னே செல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய ஆர்சிபி கேப்டன் பஃப் டு பிளேஸிஸை அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் சிஎஸ்கே மீண்டும் வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சத்தியம் கேட்ட ருதுராஜ்:
அதனால் இந்த வருடம் ஏற்கனவே சேப்பாக்கத்தில் மோதிய போட்டியின் போது ஸ்கூப் ஷாட்டை அடிக்காதீர்கள் என்று சாத்தியம் செய்யுமாறு அவரிடம் கேட்டதாகவும் ருதுராஜ் ஜாலியாக தெரிவித்துள்ளார். மேலும் இப்போட்டியிலும் டு பிளேஸிஸ் தனது முன்னாள் அணியான சிஎஸ்கே மீது கொஞ்சம் அன்போடு விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் ருதுராஜ் கலகலப்பாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த போட்டியில் டாஸ் வீசும் போது என்னுடைய முழங்கை இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று டு பிளேஸிஸ் என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் அவரிடம் “ஸ்கூப் ஷாட் அடிக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள். அந்த ஃபீல்டரை உள்வட்டத்திற்குள் வைத்து உங்களுக்கு வேறு ஒருவரை நிறுத்துகிறேன்” என்று சொன்னேன். அவர் அனைத்து திசைகளிலும் அடிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“ஆனால் ஸ்கூப் ஷாட்டை அதுவும் எங்களுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்பவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிராக நீங்கள் கொஞ்சம் அன்போடு இருக்க வேண்டும். இருப்பினும் எங்களுக்கு எதிராக அவர் அந்த ரன்களை அடிப்பதை என்கரேஜ் செய்ய மாட்டேன். குறிப்பாக அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் அவர் மீண்டும் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: எங்களை ஒன்னா பாக்குறது கடைசியாக இருக்கலாம்.. தோனி நின்னா போதும்.. அதை செஞ்சுடுவாரு.. விராட் நெகிழ்ச்சி

“இப்போது நாங்கள் இருக்கும் நிலைமைக்கு பெங்களூரு அணிக்கு எதிரான இந்த போட்டி மிகவும் முக்கியமானது. சின்னசாமி மைதானம் நல்ல கிரிக்கெட்டை விளையாடினாலும் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். இந்த நிலையில் இப்போட்டியில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தனால் சென்னை பிளே ஆஃப் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement