சுரேஷ் ரெய்னா இல்லனா நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்க மாட்டேன் – விராட் கோலி பகிர்ந்த சுவாரசியம்

Kohli-and-Raina
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 292 ஒருநாள் போட்டிகள், 113 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 250 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் தனது திறமையை அவர் இன்றளவும் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் அறிமுகமாவதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா தான் தன்னை நம்பி அவர் விளையாடும் அணியில் இணைத்ததாகவும் அவரின் பார்வையின் மூலமாகவே தனக்கு இந்திய தேசிய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது :

எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய எமர்ஜிங் அணி ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அந்த தொடரில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த தொடரின் பாதியில் அணிக்கு வந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

அப்படி பொறுப்பேற்றதும் வலைப்பயிற்சியில் விளையாடிய என்னுடைய ஆட்டத்தை பார்த்து அப்போதைய பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவிடம் ஏன் இவரை விளையாட வைக்கவில்லை? என்று கேட்டார். உடனே அவரும் ரஹானே தொடக்க வீரராக விளையாடுவதால் நான் மிடில் ஆர்டர் களமிறக்கப்பட்டு பின்னர் என்னை இறக்குவதற்கான இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

இதையும் படிங்க : 218 ரன்ஸ்.. சிஎஸ்கே’வை பந்தாடிய ஆர்சிபி.. ரோஹித், பூரான் சாதனைகளை தூளாக்கிய கிங் கோலி.. தனித்துவ சாதனை

அப்போது ரெய்னா தான் நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினார். உடனே பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து துவக்க வீரராக விளையாடுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் எங்கு இடம் கிடைத்தாலும் விளையாடுவேன் என்று கூறினேன். பிறகு உடனே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி சதம் அடித்ததும் எனக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement