218 ரன்ஸ்.. சிஎஸ்கே’வை பந்தாடிய ஆர்சிபி.. ரோஹித், பூரான் சாதனைகளை தூளாக்கிய கிங் கோலி.. தனித்துவ சாதனை

RCB vs CSK 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி பெங்களூரு நகரில் 68வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி வெறும் முனைப்புடன் இரு அணிகளும் மோதிய நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அப்போது மழையால் கொஞ்சம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கிய போட்டியில் தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் அவுட்டான பின் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அசத்திய கிங் கோலி:
அப்போது வந்த ரஜத் படிடார் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார். இருப்பினும் மறுபுறம் அரை சதமடித்து அசத்திய டு பிளேஸிஸ் 54 (39) ரன்களில் மிட்சேல் சான்ட்னர் கையால் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த கேமரூன் கிரீன் சென்னை பவுலர்களை ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக எதிர்கொண்டார். அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஜத் படிடார் 41 (23) ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் 14 (6), மேக்ஸ்வெல் 16 (5) ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் கேமரூன் கிரீன் 38* (17) ரன்கள் எடுத்த உதவியுடன் பெங்களூரு 218/5 ரன்கள் குவித்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதைத்தொடர்ந்து பெங்களூரு 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும் சென்னை 201 ரன்கள் எடுத்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியும்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் அடித்த 47 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை விராட் கோலி 3005* ஐபிஎல் ரன்களை அடித்து இந்த சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 218 ரன்ஸ்.. சிஎஸ்கே’வை பந்தாடிய ஆர்சிபி.. ரோஹித், பூரான் சாதனைகளை தூளாக்கிய கிங் கோலி.. தனித்துவ சாதனை

இதற்கு முன் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 2995 ரன்கள் அடித்ததே முன்பே சாதனையாகும். அத்துடன் இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து இந்த வருடம் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 37*
2. நிக்கோலஸ் பூரான் : 36
3. அபிஷேக் சர்மா : 35

Advertisement