மெக்கல்லம் மாதிரி அவ்ளோ நம்பிக்கையா யாரும் பேசமாட்டாங்க – கொல்கத்தா அணியின் இளம்வீரர் புகழாரம்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான பிரெண்டன் மெக்கல்லம் இருந்து வந்தார். ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அவரது அனுபவத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் கொல்கத்தா அணியின் நிர்வாகம் அவரை ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக மாற்றியது, அதன்படி கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பணியாற்றி வந்தார்,

Mccullum

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றதன் காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்கிறார். மெக்கல்லமின் பயிற்சியின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தற்போது இங்கிலாந்து அணி அதிரடியான பல வெற்றிகளை பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக நான்காவது இன்னிங்ஸில் கூட 300 ரன்கள் முதல் 400 ரன்கள் வரை அவர்கள் எளிதாக துரத்தி வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த அளவிற்கு இங்கிலாந்து அணியை அதிரடி அணியாக தற்போது மெக்கல்லம் மாற்றி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மெக்கல்லம் பயிற்சியாளராக இருந்தபோது அவரின் தலைமையின் கீழ் பயிற்சி பெற்ற வெங்கடேஷ் ஐயர் அவருடனான சில தருணங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Venky

ஒரு போட்டியின் போது நாங்கள் ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கூட மெக்கல்லம் வீரர்களிடம் வந்து பேசுகையில் : இன்னும் 13 சிக்ஸர்கள் மட்டும்தான் நமக்கு தேவை. அந்த அணுகுமுறை பின்பற்றினால் உங்களால் சாதிக்க முடியும் என்று கூறினார். இப்படி ஒரு நேரத்தில் கூட ஏழு விக்கெட்டுகளை இழந்தும் இவ்வளவு நம்பிக்கையாக யாரும் பேச மாட்டார்கள்.

- Advertisement -

அந்த வகையில் வீரர்களின் மீது அதீத நம்பிக்கை வைப்பார். அதோடு எந்த ஒரு வீரரையும் அவர் அழுத்தத்திற்குள் தள்ள விரும்பமாட்டார் என வெங்கடேஷ் ஐயர் கூறினார். மெக்கல்லம் பயிற்சியாளராக இருந்தபோது 2011-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெங்கடேஷ் ஐயரின் திறமையை உணர்ந்து மெக்கல்லம் அவரை துவக்க வீரராக களம் இறக்கி விட்டார். இதன் காரணமாக அந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐயர் 10 போட்டிகளில் 370 ரன்கள் குவித்து அந்த அணி இறுதிப் போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சுப்மன் கில் அசத்துனாலும் இன்னும் அவர் இந்த பார்மேட்க்கு தயாராகல – நியூசி வீரர் வெளிப்படை கருத்து

மேலும் தான் சந்தித்ததிலேயே மிக நம்பிக்கையான ஒருவர் மெக்கல்லம் தான் என்றும் போட்டியின் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தைரியமான அணுகுமுறையை அவர் பின்பற்றுவார் எனவும் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement