சுப்மன் கில் அசத்துனாலும் இன்னும் அவர் இந்த பார்மேட்க்கு தயாராகல – நியூசி வீரர் வெளிப்படை கருத்து

Shubman Gill IND vs ZIM
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளது. ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் முறையே 189, 161 என சொற்ப ரன்களில் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்த ஜிம்பாப்வே 3வது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 290 ரன்களை துரத்திய போது கடைசிவரை போராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணிக்கு சிகந்தர் ராசா சதமடித்து 115 ரன்கள் குவித்து போராடிய போதிலும் ஆறுதல் வெற்றியை பெறமுடியவில்லை.

Sikandar Raza Shubman Gill

- Advertisement -

மறுபுறம் அந்த வெற்றிக்கு தனது முதல் சதமடித்து 130 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் கடைசி போட்டியில் சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக தாவிப்பிடித்தது உட்பட மொத்தம் 5 கேட்ச்களையும் 245 ரன்களையும் குவித்த அவர் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முன்னதாக சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இதேபோல் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதிலேயே வெளிநாட்டில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

டி20யில் விளையாடல:
கடந்த 2018இல் இந்தியா வென்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்ற இவர் 2019இல் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் கடந்த 2021இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றிக்கு 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று முத்திரை பதிக்க துவங்கியுள்ள இவர் சச்சின் டென்டுல்கர், விராத் கோலி வரிசையில் இந்தியாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார்.

Shuman Gill

இருப்பினும் இதுவரை இவர் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை என்பது வியப்பாகும். ஐபிஎல் தொடரில் கடந்த 2018இல் கொல்கத்தா அணிக்காக அறிமுகமான இவர் 2019இல் 296 ரன்களை குவித்து வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை வென்றார். அதன்பின் 440, 478, 483 என ஒவ்வொரு வருடத்திலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கியுள்ள இவர் இந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் பேட்டிங் துறையில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இன்னும் தயாராகல:
இப்படி நல்ல ரன்களை நல்ல சராசரியில் எடுத்தாலும் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட தவறுவதே இதுவரை இந்தியாவுக்கு அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாட தடையாக நிற்கிறது என்றே கூறலாம். அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினாலும் டி20 கிரிக்கெட்டுக்கு சுப்மன் கில் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரீஸ் தற்போது நல்ல வளர்ச்சி கண்டுள்ள அவர் இதேபோல் முயற்சித்தால் அடுத்த ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது.

Scott-Styris

“அங்கு (டி20) விளையாடுவதற்கு அவர் இன்னும் தயாராக இருக்கிறார் என்று எனக்கு தோன்றவில்லை. இருப்பினும் விரைவில் இருப்பார், எடுத்துக்காட்டாக இப்போதிலிருந்து 12 மாதங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இளம் வீரரான அவர் நிறைய கற்றுக்கொண்டு டெஸ்ட் அணியிலிருந்து டி20 அணிக்கும் வருவதற்கு முயற்சித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமான போது அவரின் முன்னாங்கள் ஆட்டம் (ஃப்ரன்ட் ஃபுட்) அவருடைய மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. அதேபோல் ஒரு புதிய இளம் வீரராக ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்காமல் அதற்கு கீழே உட்கார்ந்தார்”

- Advertisement -

“இருப்பினும் ஹூக் மற்றும் புல் ஷாட்களில் அவர் பலமானவராக இருக்கிறார். அதை அவர் தொலைக்கவில்லை. மேலும் முன்னங்காலில் தடுமாறியதை போலவே மைதானத்துக்கு நேராக அடிப்பதற்கும் தடுமாறினார். ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இளம் வீரராக அவர் வளர்ந்து வருவது இந்திய கிரிக்கெட்டுக்கு சாதகமான ஒன்றாகும்.

இதையும் படிங்க : நான் கிரிக்கெட்டை வெறுத்ததுக்கு காரணமே ஐ.பி.எல் தான் – இங்கிலாந்து வீரர் வருத்தத்துடன் பேட்டி

மேலும் சமீப காலங்களில் அவர் தன்னுடைய திறமையால் தனது பலவீனங்களை குறைத்து வருகிறார். அதன் காரணமாக அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாட தகுதியானவர் என்று நம்புகிறேன். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார்.

Advertisement