நான் கிரிக்கெட்டை வெறுத்ததுக்கு காரணமே ஐ.பி.எல் தான் – இங்கிலாந்து வீரர் வருத்தத்துடன் பேட்டி

Stokes
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்த வேளையில் 16-வது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களை தாண்டி வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வருபவர் தான் பென் ஸ்டோக்ஸ்.

Ben Stokes

- Advertisement -

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகள், 105 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் கடந்து 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர் இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் பெரிய மதிப்பில் ஏலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டால் தான் என்னுடைய கிரிக்கெட்டை நான் வெறுத்ததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

stokes 1

இது குறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருந்ததால் எனது தந்தை இறப்பிற்கு முன்னர் கூட கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை. இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த போதுதான் எனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவரை என்னால் சரியாக பார்க்க கூட முடியவில்லை.

- Advertisement -

என் தந்தை இறந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதனாலேயே கிரிக்கெட்டின் மீது எனக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டது. நான் ஐபிஎல்-ல் விளையாட வேண்டும் அதுவும் ராஜஸ்தான் அணிக்காக ஆடுவது எனது தந்தைக்கு பிடிக்கும். ஆனால் அதுவே நான் கிரிக்கெட்டை வெறுக்கவும் காரணமாக மாறிவிட்டது. என் தந்தை இறப்பதற்கு முன்னால் அவரை கடைசியாக பார்க்க முடியாமல் போனதாலேயே நான் கிரிக்கெட்டை வெறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியுடன் அவரை ஒப்பிடுவது சரியல்ல. கோலி வேறலெவல் பிளேயர் – பாராட்டும் பாக் ஜாம்பவான்

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பென் ஸ்டோக்ஸ்-ஸின் தந்தை ஜெரால்ட் புற்றுநோயால் இறந்தார். அவர் இறப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால் கடைசி நிலையில் எதுவும் செய்ய முடியாமல் அவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement