எங்களோட விருப்பம் வேற.. ஆனா தோனி அதுல கொஞ்சம் ட்ராமா பண்ணுவாரு.. மைக் ஹசி பேட்டி

Mike Husser 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. இம்முறை புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் அந்த அணி இதுவரை 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. எனவே பெங்களூருவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் சென்னை இருக்கிறது.

இதற்கிடையே இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெறுவாரா என்ற வழக்கமான எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. 42 வயதை கடந்து விட்ட அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் கடைசி சில ஓவர்களில் களமிறங்கி எதிரணிகளை பந்தாடும் அவர் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஹசி விளக்கம்:
அதனால் தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் தொடர்ந்து கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனி இன்னும் சில வருடங்கள் விளையாடுவதையே சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாக பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த நிலைமையில் என்னைப் போலவே உங்களுடைய கணிப்பும் இருக்கிறது. அவர் தனது அட்டைகளை மார்புக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்யும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறோம். நன்றாக தயாராகும் அவர் வலைப்பயிற்சியில் நிறைய பந்துகளை அடிக்கிறார். உண்மையில் எல்லா சீசன்களிலும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்”

- Advertisement -

“கடந்த சீசனுக்கு பின் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே ஆரம்பத்திலிருந்தே அவர் அதை நிர்வகித்து வருகிறார். தனிப்பட்ட முறையில் இன்னும் சில வருடங்கள் அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஆனால் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதைப் பற்றிய முடிவை அவர் மட்டுமே எடுப்பார். அதில் அவர் கொஞ்சம் ட்ராமாவை கட்டமைக்கவும் விரும்புகிறார்”

இதையும் படிங்க: 2007இல் தோனி அவங்க பேச்சை கேட்டாரு.. 2024இல் ரோஹித்தும் அதை செய்யனும்.. ஹர்பஜன் வெளிப்படை

“எனவே அந்த முடிவு மிக விரைவில் வராது என்றே நான் எதிர்பார்க்கிறேன். ரசிகர்கள் அவர் மேல் வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் தன்னுடைய முழங்காலை நிர்வகித்து வருவதன் காரணமாகவே அவர் கடைசியில் பேட்டிங் செய்ய வருகிறார். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே பந்தை தெளிவாக அடிப்பதில் தோனிக்கு அடுத்ததாக யாரும் இருக்க முடியாது. அவர் அபரிதமானவர்” என்று கூறினார்.

Advertisement