2007இல் தோனி அவங்க பேச்சை கேட்டாரு.. 2024இல் ரோஹித்தும் அதை செய்யனும்.. ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan Singh 9
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரலாற்றில் முதலும் கடைசியாக 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அதன் பின்பும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்விகளையே சந்தித்தது. அதனால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றால் பார்ப்போம் என்ற மனநிலையுடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
இந்நிலையில் 2007இல் எம்எஸ் தோனி அனுபவமற்ற புதிய கேப்டனாக இருந்ததால் சேவாக், கம்பீர் மற்றும் தம்மைப் போன்ற சீனியர்களின் ஆலோசனைகளை கேட்டு வெற்றிகரமாக செயல்பட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே தனியாளாக கோப்பையை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ரோஹித் சர்மாவும் மற்ற வீரர்களிடம் தேவையான ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் இந்திய அணியால் உலகக் கோப்பை வெல்ல முடியாது என்றும் எச்சரிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த விஷயம் பலருக்கு தெரியாது. தோனி புதிய கேப்டனாக இருந்ததால் எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவும் களத்திலும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சேர்ந்து திட்டங்களை வகுப்போம்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நான் முக்கியமான 18வது ஓவரை வீசினேன். அதில் நாங்கள் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தது எங்களைக் காப்பாற்றியது. இப்போது போல் அந்த காலத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவரில் 25 ரன்கள் அடிக்க மாட்டார்கள். நீங்கள் அணியாக சேர்ந்து விளையாடும் போது போட்டிகளை வெல்லலாம்”

இதையும் படிங்க: 75க்கு 67.. பாகிஸ்தான் போட்டியில் நியூயார்க் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? ஐசிசி அதிகாரி தகவல்

“உண்மையில் தோனி கேட்பதில் மகத்தானவர். அவர் அனைவரது பேச்சை அடிப்படையாக வைத்து அணிக்கு சாதகமான முடிவை எடுப்பார். இப்போது கேள்வி என்னவெனில் அதே போல ரோஹித் சர்மா செய்வாரா? அவரால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. வெற்றி என்பது நாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. எனவே சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணியாக ஒன்று சேர்ந்து விளையாடினால் வெல்ல முடியும். ஆனால் சொந்த சாதனையில் கவனம் செலுத்தினால் அனைத்தும் கடினமாகி விடும்” என்று கூறினார்.

Advertisement