11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சாதனையை நிகழ்த்திய – சஞ்சு சாம்சன்

Samson-500
- Advertisement -

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்ததோடு பிளேஆப் சுற்றிற்கான வாய்ப்பினையும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

தொடர்ந்து எஞ்சியுள்ள கடைசி லீக் போட்டியில் அவர்கள் விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று மைதானத்தில் நடைபெற்ற 65-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பஞ்சாப் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 144 ரன்கள் குவிக்க பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அவர் 18 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை எந்த ஒரு சீசனிலும் 500 ரன்களை கடக்காத வேளையில் தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளை சேர்த்து 5 அரைசதங்கள் உட்பட 500 ரன்களை கடந்து முதல் முறையாக ஒரு சீசனில் 500 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : அவர் ஃபார்மில் இல்லாததால்.. டி20 உ.கோ தொடரில் விராட் கோலியை ஓப்பனிங்கில் இறக்கலாம்.. பதான் யோசனை

ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருந்த வேளையில் அவருக்கு இந்த சீசன் மிகவும் அற்புதமான சீசனாக மாறியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 165 போட்டியில் விளையாடி மூன்று சதம் மற்றும் 25 அரை சதங்களுடன் 4392 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement