டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களை இப்படி மாற்ற வேண்டும்.. சச்சின் கொடுத்த ஐடியா – விவரம் இதோ

Sachin Tendulkar
- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பையும், சுவாரசியத்தையும் கூட்டுவதற்காக ஐ.பி.எல் போட்டிகளில் சில விதிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தாண்டியும் இருக்கின்றன. சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே விதி இருக்கிறது. ஆனால் ஐ.பி.எல் போட்டிகளில் இம்பேக்ட் பிளேயர் விதியும் சேர்ந்து இருக்கிறது. இப்படி டி20 போட்டிகளில் பேட்ஸ்மன்களுக்கு சாதகமாக ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன.

பவர்பிளே ஓவர்களின் விதியை மாற்ற வேண்டும் : சச்சின் டெண்டுல்கர்

ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எந்த ஒரு விதியும் இல்லாதது பவுலர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. குறிப்பாக டி20 போட்டிகளை பொறுத்தவரை முதல் 6 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக இருப்பதினால் பேட்ஸ்மேன்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே ரன்களை குவித்து மிகப் பெரிய இலக்கை நோக்கி செல்கின்றனர். இதன் காரணமாக பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க நேர்கிறது.

- Advertisement -

மேலும் போட்டியின் முடிவும் பவர்பிளே ஓவர்களின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 போட்டிகளில் பவர்பிளே விதிமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நவீன டி20 கிரிக்கெட்டில் 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையில் தான் போட்டியின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது விளையாடி வரும் அனைத்து அணிகளும் பவர்பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களுக்கு எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை திட்டமிட்டு தற்போது அதற்கு ஏற்றார் போல் தயாராகிவிட்டனர். எனவே என்னை பொறுத்தவரை டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களுக்கான விதிமுறையில் மாற்றம் செய்து முதல் நான்கு ஓவர்கள் பேட்டிங் பவர்பிளேவாக அறிவிக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி செய்த 2 தவறு தான் அவங்களோட இந்த பரிதாப நிலைக்கு காரணம் – சுட்டிக்காட்டிய அஷ்வின்

மீதமுள்ள இரண்டு ஓவர்கள் பந்துவீச்சு பவர்பிளேவாக அறிவித்து பந்துவீசும் அணி எந்த நேரத்திலும் அதை பயன்படுத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். இப்படி மாற்றம் செய்தால் தான் பேட்ஸ்மன்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் சரிசமமான ஒரு மோதல் இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement