விராட் கோலியுடன் அவரை ஒப்பிடுவது சரியல்ல. கோலி வேறலெவல் பிளேயர் – பாராட்டும் பாக் ஜாம்பவான்

INDvsPAK
- Advertisement -

கிரிக்கெட்டில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அணிகளுக்கு மத்தியிலும் அதில் விளையாடும் வீரர்களுக்கு மத்தியிலும் போட்டி இருப்பது சாதாரண ஒன்றாகும். குறிப்பாக ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி என்பதையும் தாண்டி வெற்றி பெறுவதை கௌரவமாக நினைத்து ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். அதேபோல் வரலாற்றில் இவ்விரு நாடுகளுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கி வருவதால் அதில் சிறந்தவர் யார் என்ற ஒப்பீடுகள் இருநாட்டு ரசிகர்களுக்கிடையே காலம் காலமாக இருந்து வருகிறது.

Virat Kohli Babar Azam

- Advertisement -

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம், கபில் தேவ், வாசிம் அக்ரம் போன்ற ஒப்பீடுகளை தாண்டி நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் இவர் தான் பெரியவர் அவர் தான் பெரியவர் என இருநாட்டு ரசிகர்களும் பேசுவது வழக்கமாகிவிட்டது. இதில் கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அற்புதமாக எதிர்கொண்டு வரும் விராட் கோலி கிட்டத்தட்ட 50 என்ற சிறப்பான பேட்டிங் சராசரியில் 23000 ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 33 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.

பாபர் உயர்ந்தவரா:
இருப்பினும் இரவனால் பகலும் வரும் என்பது போல் இமாலய வளர்ச்சி கண்ட அவர் கடந்த 2019க்குப்பின் பார்மை இழந்து சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். மறுபுறம் கடந்த 2015இல் அறிமுகமான பாபர் அசாம் விராட் கோலி பார்மை இழந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டு சில தருணங்களில் அவரையே மிஞ்சும் சாதனைகளை படைத்து பாகிஸ்தானுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Babar-Azam-and-Virat-Kohli

குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ள அவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 10 பட்டியலிலும் ஜொலிக்கிறார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் எனக்கூறும் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சில சமயங்களில் சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேன் ஆகியோரை விட சிறந்தவர் என்றும் அப்பட்டமாக பேசுகிறார்கள்.

- Advertisement -

ஒப்பீடு வேண்டாம்:
இந்நிலையில் ஜாம்பவானான உருவெடுக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் விராட் கோலியை போல் சிறப்பாக செயல்பட்டாலும் ஆரம்ப காலத்தில் மட்டுமே இருப்பதால் விராட் கோலியுடன் ஒப்பிடுவதில் எந்த நியாயமுமில்லை என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதுபோன்ற ஒப்பீடுகள் வருவது இயற்கையானது. எங்களது காலத்தில் இன்சமாம், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரிடையே ஒப்பீடுகள் இருந்தது”

“அதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர், ஜாவேத் மியான்தத், குண்டப்பா விஸ்வநாத், ஜாகீர் அப்பாஸ் ஆகியோரிடையே ஒப்பீடுகள் இருந்தது. அந்த வகையில் தற்சமயத்தில் நல்ல டெக்னிக் கொண்டுள்ள பாபர் அசாம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் சிறப்பாக செயல்பட பசியுடன் உள்ளார். இளமையான கேப்டனாக இருக்கும் அவர் விரைவாக கற்றுக் கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த ஆரம்ப கட்டத்திலேயே அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது.

- Advertisement -

விராட் கோலி இருக்கும் இடத்தை நோக்கி பாபர் அசாம் பயணித்து வருகிறார். ஆனால் அதற்காக இப்போதே அவரை ஒப்பிடுவது சரியானதல்ல. இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வருவதற்கு அவர் பயணித்து வருகிறார்” என்று கூறினார்.

Kohli-1

அதே போல் பார்மின்றி தவித்தாலும் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்தவர் என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுக்கும் வாசிம் அக்ரம் இந்த ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பார்முக்கு திரும்பி விடக்கூடாது என்று நாட்டுப்பற்றுடன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் விராட் கோலி மீது இந்திய ரசிகர்கள் வைக்கும் விமர்சனம் தேவையற்றது என்று நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சகாப்தத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றில் அவர் மிகச்சிறந்த வீரர். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் தற்போதைய இந்திய அணியில் மிகச்சிறந்த ஃபீல்டராக உள்ளார்.

இதையும் படிங்க : சச்சின், சேவாக், கோலிய பாத்துட்டேன் ஆனா இப்போதைய இந்திய அணியில் அவருக்கு பந்துவீச விரும்புகிறேன் – பிரட் லீ பாராட்டு

க்ளாஸ் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த வீரரிடம் இருக்கும் என்பதற்கு விராட் கோலி எடுத்துக்காட்டாவார். அவர் பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக வந்துவிடக்கூடாது என்று நம்புகிறேன்” எனக்கூறினார்.

Advertisement