சச்சின், சேவாக், கோலிய பாத்துட்டேன் ஆனா இப்போதைய இந்திய அணியில் அவருக்கு பந்துவீச விரும்புகிறேன் – பிரட் லீ பாராட்டு

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் பிரட் லீ வரலாறு கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். 1999 – 2012 வரையிலான கால கட்டத்தில் தனது அபாரமான வேகப்பந்துகளால் எதிரணிகளை திணறடித்த இவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் 718 விக்கெட்களை எடுத்து 2007 உலகக் கோப்பை போன்ற சரித்திர வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்கு பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய இவர் உலகில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்து நிறைய முறை அவர்களை வெற்றிகரமாக அவுட் செய்துள்ளார்.

Sehwag

- Advertisement -

ராகுல் டிராவிட் போன்ற தரமான இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள இவர் நிறைய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அதேசமயம் வரலாற்றில் இவருக்கு சச்சின் டெண்டுல்கர் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைய தருணங்களில் சவாலாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் சச்சினை விட முதல் பந்திலிருந்தே பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடி காட்டும் வீரேந்திர சேவாக்கிற்கு பந்து வீசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாக சமீபத்தில் பிரெட் லீ பாராட்டியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் இளம் வயது விராட் கோலி போன்ற தரமான இந்திய பேட்ஸ்மேன்களை பார்த்து விட்டதாக தெரிவிக்கும் பிரெட் லீ தற்போதைய இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களில் ரிஷப் பண்ட்டுக்கு எதிராக பந்துவீச விரும்புவதாக கூறியுள்ளார்.

மிரட்டல் பண்ட்:
கடந்த 2018இல் அறிமுகமான ரிஷப் பண்ட் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்குப்பின் கடந்த 3 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் நிரந்தரமான இடத்தை பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் படைத்துள்ள அவர் இந்த வயதிலேயே ஒருசில சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

Pant

பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக் போல சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடும் இவர் கடந்த 2021இல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நடந்த போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக காபா மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் 89* ரன்கள் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஒரு இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

- Advertisement -

லீ பாராட்டு:
அதேபோல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறிய அவர் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்தார். தற்போது 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் வருங்கால சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார். அதனால் தற்சமயத்தில் தாம் விளையாடினால் ரிஷப் பண்ட்க்கு எதிராக பந்துவீச விரும்புவதாக தெரிவித்துள்ள பிரெட் லீ இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எனது காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் போன்றவர்களுக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியடைகிறேன்”

Lee

“அதேபோல் விராட் கோலியின் ஆரம்ப காலத்திலும் அவருக்கு எதிராக பந்து வீசியுள்ளேன். இருப்பினும் தற்சமயத்தில் ரிஷப் பண்ட் போன்ற திறமையானவருக்கு எதிராக பந்து வீச மிகவும் ஆவலுடன் இருப்பதாக நினைக்கிறேன். அவர் மிகவும் அதிரடியானவர், கிரீஸ் சுற்றி நடந்து பேட்டிங் செய்பவர், ஆக்ரோஷமானவர். எனக்கு நானே சவால் செய்ய விரும்பும் ஒரு இளம் வீரர். சமீபத்தில் அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவரது பேட்டிங் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

அதாவது இளம் வீரராக இருக்கும் ரிஷப் பண்ட் அதிரடியாகவும் பேட்டிங் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள இலக்கணத்திற்கு மாறாகவும் பேட்டிங் செய்யக் கூடியவராக இருப்பதால் அவரை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசுவது கடினம் என்று தெரிவிக்கும் பிரட் லீ அதனாலேயே அவருக்கு பந்து வீச விரும்புவதாக பாராட்டியுள்ளார். சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சதமடித்து நல்ல பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்துவிட்டு அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement