கங்குலி ஐடியா செட்டாகாது.. இந்தியாவுக்காக விராட் கோலி இதை செஞ்சா அவமானம் இல்ல.. ஹர்பஜன் கருத்து

Harbhajan Singh 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடரில் விளையாடப் போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் நட்சத்திர சீனியர் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் உலகக்கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களின் பிட்ச்கள் ஸ்லோவாக இருக்கும் என்று தேர்வுக் குழு கருதுகிறது.

மறுபுறம் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் நிதானமாக விளையாடி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே அங்குள்ள மைதானங்களுக்கு விராட் கோலி பொருந்த மாட்டார் என்று கருதும் தேர்வுக் குழு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இருப்பினும் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி நேரடியாக ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சௌரவ் கங்குலி சொல்வது போல் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்குவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மாறாக ஓப்பனிங்கில் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதற்காக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். அதனால் சிவம் துபேவுக்காக தம்முடைய 3வது இடத்தை விட்டுக் கொடுத்து விராட் கோலி 4வது இடத்தில் களமிறங்கினால் அது அவமானம் கிடையாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி 3வது இடத்தில் வரவேண்டும். ஏனெனில் டாப் ஆர்டரில் நான் இடது வலது கை பேட்ஸ்மேன்களை பார்க்க விரும்புகிறேன். எனவே முதல் 6 – 7 ஓவர்களில் தேவைப்பட்டால் சிவம் துபே போன்றவர் 3வது இடத்தில் களமிறங்கலாம். விராட் கோலி 4வது இடத்தில் வரலாம்”

இதையும் படிங்க: 3 கேட்ச் ட்ராப்.. 261 ரன்ஸ்.. பஞ்சாப்பை வெளுத்த கொல்கத்தா.. சிஎஸ்கே அணியை முந்தி புதிய சாதனை ஸ்கோர்

“இங்கே நாம் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் குதிரைகளை பயன்படுத்த வேண்டும். அதில் எந்த அவமரியாவையும் இல்லை. எனவே சிறந்த வீரரான விராட் கோலி அணியை முன்னிறுத்தி நம்பர் 3 அல்லது 4வது இடத்தில் விளையாட வேண்டும். ஒருவேளை இதே கேள்வியை நீங்கள் விராட் கோலியிடம் கேட்டால் அவரும் இந்திய அணி தான் தமக்கு முக்கியம் என்று சொல்வார்” என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

Advertisement