3 கேட்ச் ட்ராப்.. 261 ரன்ஸ்.. பஞ்சாப்பை வெளுத்த கொல்கத்தா.. சிஎஸ்கே அணியை முந்தி புதிய சாதனை ஸ்கோர்

KKR vs PBKS
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 42வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினார்கள். அதில் ஏற்கனவே சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் சுனில் நரேன் சுமாராக பந்து வீசிய பஞ்சாப் பவுலர்களை அடித்து நொறுக்கி 23 பந்துகளில் அரை சதமடித்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 25 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார்.

- Advertisement -

சாதனை ஸ்கோர்:
இதற்கிடையே இந்த ஜோடி கொடுத்த 3 கேட்சை பஞ்சாப் அணியினர் தவற விட்டனர். அதற்கு வருந்தும் அளவுக்கு வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 10.2 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 138 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவுக்கு அற்புதமான துவக்கம் கொடுத்தது. அவர்களுடைய அதிரடியால் முதல் 10 ஓவரில் கொல்கத்தா 137/0 ரன்கள் அடித்தது.

அதனால் ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவரில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து கொல்கத்தா சாதனை படைத்தது. இதற்கு முன் இதே சீசனில் டெல்லிக்கு எதிராக விசாக்கப்பட்டினத்தில் முதல் 10 ஓவரில் கொல்கத்தா 135/1 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி மிரட்டலாக விளையாடிய இந்த ஜோடியில் ஒரு வழியாக சுனில் நரேன் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 71 (32) ரன்கள் குவித்து சாம் கரன் வேகத்தில் போல்டானார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் 9 பவுண்டரி 6 சிக்ஸரை பறக்க விட்ட ஃபில் சால்ட் 75 (37) ரன்கள் விளாசி அவுட்டானார். அப்போது வந்த ஆண்ட்ரே ரசல் அடித்து நொறுக்க முயற்சித்து 2 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (12) ரன்களில் அவுட்டார். அப்போது வெங்கடேஷ் ஐயர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வேகமாக ரன்கள் குவிக்க முயற்சித்து 28 (10) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல இந்திய அணியில இடம் கன்பார்ம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அபிஷேக் சர்மாவுக்கு – யுவ்ராஜ் சிங் அட்வைஸ்

இறுதியில் வெங்கடேஷ் ஐயர் 39 (23) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் கொல்கத்தா 261/6 ரன்கள் எடுத்தது. அதனால் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணியாக கொல்கத்தா புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கொல்கத்தாவுக்கு எதிராக 2023 சீசனில் சிஎஸ்கே 235/4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் பந்து வீச்சில் சொதப்பிய பஞ்சாப் சார்பில் அர்ஷிதீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார்.

Advertisement