இப்படி பேசுவது ஏமாற்றமா இருக்கு.. விராட் கோலி இல்லனா இந்தியா ஜெயிச்சுருக்குமா? இர்பான் பதான் ஆதங்கம்

Irfan Pathan 5
- Advertisement -

ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதுவரை 500 ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். ஆனாலும் சொந்த சாதனைகளுக்காகவும் சுயநலத்துடனும் விராட் கோலி விளையாடி வருவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

பொதுவாகவே 2008 முதல் இன்று வரை ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல அதிரடியாகவும் விளையாடி போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வதே விராட் கோலியின் ஸ்டைலாகும். அந்த ஸ்டைலை பின்பற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

பதான் ஆதங்கம்:
இருப்பினும் ரசல், பூரான் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களைப் போல் அல்லாமல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலி சுயநலவாதி என்று விமர்சிக்கப்படுகிறார். அதனாலேயே 2024 டி20 உலகக் கோப்பையில் அவரை தேர்வு செய்யக்கூடாது என்றும் ஒரு தரப்பு பேசி வருகிறது. இந்நிலையில் விராட் கோலியை விமர்சிப்பதும் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யலாமா என்று கேள்வி எழுப்பதும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் இது ஏமாற்றத்தை கொடுக்கும் கேள்வியாகும். உலகக் கோப்பையில் விராட் கோலி இடம் பெறுவாரா இல்லையா? என எப்படி கேள்வி வரலாம். நான் ஐபிஎல் தொடரில் ஸ்டிரைக் ரேட்டை பற்றி பேசவில்லை. நாம் இங்கே இந்திய அணியின் தேர்வு பற்றி பேசுகிறோம். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி கிட்டத்தட்ட 50, ஸ்ட்ரைக் ரேட் 137”

- Advertisement -

“இந்த இரண்டையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 190 வரும். அப்படி இந்த இரண்டும் 180 தாண்டினால் அது உச்சகட்ட தரத்தை காண்பிக்கிறது. 2022இல் நடைபெற்ற கடைசி உலகக் கோப்பையில் அவர் எப்படி போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவர் 82 ரன்கள் அடிக்காமல் போயிருந்தால் இந்தியா வென்றிருக்காது”

இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் மட்டுமல்ல.. அந்த 3 விஷயத்தால் ஆல் ஏரியாலயும் பவுலர்களை அடிக்கிறாங்க.. சிராஜ் பரிதாப பேட்டி

“அன்றைய நாளில் விராட் கோலியின் ஆட்டத்தால் இந்தியா வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டிகளில் நிறைய பிட்ச்கள் ஸ்லோவாக இருக்கும். ஒருவேளை ஆடுகளங்கள் அப்படி இருந்தால் அங்கே தான் உங்களுக்கு அனுபவம் தேவை. அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உலகக்கோப்பை இருக்கலாமா? என்ற கேள்வியே உங்களுக்கு வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement