சுமாரான ரெக்கார்ட்டுக்காக கழற்றி விட்றாதீங்க.. இந்தப் பையன் 2024 டி20 உ.கோ அணியில் இருக்கனும்.. ஸ்ரீகாந்த்

Srikkanth 3
- Advertisement -

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் வெளியிடப்பட உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் தேர்வு செய்யப்படவுள்ள அந்த அணியில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு அதிகப்படியான முன்னுரிமை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி வரும் சிவம் துபே முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. அதே போல கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் ஆரம்பத்தில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை பெரிய அளவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் 8 போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் கருத்து:
அதனால் உலகக் கோப்பை அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்திற்காக ரிங்கு சிங்கை இந்திய தேர்வுக்குழு புறக்கணித்து விடக்கூடாது என முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிங்கு சிங் கண்டிப்பாக என்னுடைய 15 பேர் இந்திய அணியில் இருப்பார். இம்முறை ஐபிஎல் தொடரில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு நிறைய கிடைக்கவில்லை. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய ரெக்கார்டை பாருங்கள். அது அற்புதமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் அசத்தலாக செயல்பட்ட அவர் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் நன்றாக விளையாடியுள்ளார்”

- Advertisement -

“எனவே ரிங்கு 15 பேர் இந்திய அணியில் இருக்க வேண்டும். ஆனால் சமீபத்திய ஃபார்ம் அல்லது வாய்ப்பை வைத்து நீங்கள் பார்க்கும் போது அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நாளின் இறுதியில் நீங்கள் வீரரை பார்க்காமல் அவருடைய திறமையையும் புள்ளிவிவரத்தையும் பார்க்க வேண்டும். குறிப்பாக அவர் சிறந்த வீரரா? எதிரணிக்கு ஆபத்தை கொடுப்பவரா? ஃபிட்டாக இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: ரிங்கு, சிராஜுக்கு இடமில்லை.. லெஜெண்ட் பிரைன் லாராவின் 2024 டி20 உ.கோ இந்திய அணி இதோ

“அந்த வகையில் ரிங்கு சிங்கிடம் தகுதிகள் இருக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் 15 பேர் இந்திய அணியின் விமானத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய ரிங்கு சிங் இந்தியாவுக்காக அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்தினார். எனவே 2024 ஐபிஎல் தொடரை வைத்து அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement