10 வருஷமா ஏமாத்தீட்டிங்க.. இப்போவாச்சும் அவருக்கு டி20 உ.கோ சான்ஸ் கொடுங்க.. ஹெடன் கோரிக்கை

Matthew Hayden
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் வெளியிடப்பட உள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட உள்ள அந்த அணியில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் அந்த இடத்திற்கு ரிசப் பண்ட், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை சிறப்பாக செயல்படவில்லை. எனவே அவர்கள் இம்முறை இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவது கடினம் என்றே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

- Advertisement -

ஹைடன் ஆதங்கம்:
அதில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் 385 ரன்கள் அடித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவருடைய தலைமையில் இதுவரை 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக 371 ரன்கள் குவித்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

எனவே உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கே பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சனுக்கு இதுவரை இந்திய அணியில் எப்போதுமே நிலையான வாய்ப்புகள் கிடைத்ததில்லை. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துகிறார் என்ற ஒரே காரணத்திற்காக டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் நிறைய வாய்ப்புகளைப் பெற்றார் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் கடந்த 10 வருடங்களில் சஞ்சு சாம்சனுக்கு எப்போதுமே நிலையான வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பையிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் ஹைடன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தேசிய அணியில் சஞ்சு எப்போதுமே கவனிக்கப்படாமல் இருக்கிறார்”

இதையும் படிங்க: இனிமே என்கிட்ட எதுவும் கேட்காத.. மைதானத்தில் வைத்தே ருதுராஜுக்கு அட்வைஸ் கொடுத்த தோனி – பத்ரிநாத் பகிர்ந்த தகவல்

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த ஒரு தசாப்தமாக இந்திய அணியில் அவருக்கு ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. பந்தை திடமாக அடிக்கக்கூடிய அவரை நீங்கள் பேட்டிங் வரிசையில் மேலே வைத்தால் பல தருணங்களில் எதிரணியில் சேதத்தை ஏற்படுத்துவார். இன்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் கூட அவர் கேப்டனாக சிறந்த இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்தார்” என்று கூறினார்.

Advertisement