ஷ்ரேயாஸ் ஐயரையும், இஷான் கிஷனையும் நீக்கியது நான் இல்ல.. அவர்தான் – ஜெய் ஷா கொடுத்த விளக்கம்

Jai-Shah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அவர்களது இந்த நீக்கம் பெரிய அளவில் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் அந்த நீக்கத்திற்கு ஆதரவை தெரிவித்திருந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரஞ்சி தொடரில் விளையாடவில்லை என்ற காரணத்தாலே பி.சி.சி.ஐ அவர்கள் மீது இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடியதால் ஓய்வு வேண்டும் என்று இந்திய அணியில் இருந்து விலகிய இஷான் கிஷன் பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து ஐ.பி.எல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டார்.

- Advertisement -

அந்த நேரத்தில் பிசிசிஐ அவரை ரஞ்சி போட்டியில் விளையாட கேட்டுக் கொண்டும் இஷான் கிஷன் பிசிசிஐ-யின் பேச்சை கேட்காமல் தனியாக பயிற்சி செய்து வந்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.

ஆனாலும் இவர்கள் இருவரும் பிசிசிஐ-யின் சொல்பேச்சை கேட்காததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது. அதோடு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இவர்கள் இருவருக்கும் இடம் கிடைக்காமல் போனது. இந்நிலையில் இந்திய அணியின் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர்கள் இருவரும் நீக்கப்பட நான் காரணம் இல்லை என்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தான் காரணம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை அதனால் ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர்கள் இருவரையும் நீக்கியது நான் அல்ல.. தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் முடிவு தான் அது.. அதனை செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது.

இதையும் படிங்க : குஜராத் அணி சார்பாக வரலாற்று சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஜோடி – விவரம் இதோ

அதே வேளையில் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களையும் எங்களால் தவிர்க்க முடியாது. அந்த வகையில் தான் பல இளம் வீரர்களுக்கு புதிதாக ஒப்பந்தமும் வழங்கப்பட்டது. மேலும் எப்போதுமே வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடுவதை பிசிசிஐ கருத்தில் கொண்டு வருகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பும் வழங்கப்படும் என ஜெய் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement