இப்போவும் சொல்றேன்.. அதான் விராட் கோலிக்கு கரெக்ட்.. பிரச்சனை இம்பேக்ட் விதிமுறையில் இல்ல.. கங்குலி பேட்டி

Sourav Ganguly 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பல விவாதங்களுக்கு பின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ளார்.

எனவே ஸ்லோவான பிட்ச்களை வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் காணப்பட்டது. அதற்கு இந்தியா உலகக் கோப்பை வெல்ல ஏற்கனவே உலகின் அனைத்து மைதானங்களிலும் அபாரமாக விளையாடி தன்னை நிரூபித்த விராட் கோலி அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

கங்குலி கருத்து:
அதில் ஒரு படி மேலே சென்ற முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் மே ஒன்பதாம் தேதி பஞ்சாப்புக்கு எதிராக 92 ரன்களை 195 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய விராட் கோலி தற்போது அற்புதமான ஃபார்மில் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று மீண்டும் தெரிவிக்கும் கங்குலி ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் அதிக ரன்கள் அடிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அற்புதமாக விளையாடுகிறார். நேற்று இரவு அவர் மிகவும் வேகமாக 90 ரன்கள் அடித்தார்”

- Advertisement -

“நீங்கள் அவரை உலகக் கோப்பையில் துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். அதற்கு அவருடைய கடைசி சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் தான் சாட்சியாகும். டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அடிக்கடி 240 – 250 ரன்கள் அடிப்பதை பார்க்க முடிகிறது”

இதையும் படிங்க: ராகுல் டிராவிட்டின் 14 வருட சாதனையை உடைத்த டிகே.. ஆர்சிபி அணியின் தவறை அம்பலமாக்கும் சாதனை

“அதற்கு காரணம் பேட்டிங் பிட்ச்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள். இம்பேக்ட் வீரர் விதிமுறையால் அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுவதால் புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. அங்கே அசத்துவதற்கு நீங்கள் மிகுந்த திறமையுடன் இருக்க வேண்டும். பும்ரா, அக்சர், குல்தீப் ஆகியோர் அதே சூழ்நிலைகளில் அசத்துகின்றனர்” என்று கூறினார். அதாவது விதிமுறையை குறை சொல்லாமல் பவுலர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கங்குலி கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement