57/5 என விழுந்த கொல்கத்தாவை காப்பாற்றிய வெங்கடேஷ் ஐயர்.. மீண்டும் மிரட்டிய பும்ரா முதல் இந்தியராக சாதனை

MI vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே மூன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 51வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தவிக்கும் மும்பை டாஸ் வென்று கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்டை 5 ரன்னில் அவுட்டாக்கிய துஷாரா அடுத்ததாக வந்த ரகுவன்சியை 13 ரன்களில் காலி செய்தார்.

அதோடு நிறுத்தாத அவர் அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 6 ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சுனில் நரேன் 8 ரன்களில் கேப்டன் பாண்டியா வேகத்தில் போல்ட்டானார். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 9 ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார். அதனால் 6 ஓவரின் முடிவில் 57/5 என கொல்கத்தா ஆரம்பத்திலேயே திணறியது.

- Advertisement -

அசத்திய வெங்கடேஷ்:
அப்போது கொல்கத்தா அணி 100 ரன்கள் தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை 100 ரன்கள் தாண்ட வைத்தது.

அந்த வகையில் 17 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 6வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி கொல்கத்தாவை மீட்டெடுத்த போது மனிஷ் பாண்டே 42 ரன்களில் கேப்டன் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அதே போல மறுபுறம் அசத்திய வெங்கடேஷ் ஐயர் பொறுப்பான அரை சதமடித்து போராடினார். ஆனால் அடுத்ததாக வந்த ஆண்ட்ரே ரசல் அவருடன் ஏற்பட்ட தவறான புரிதலால் 7 (2) ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இறுதியில் ரமந்திப் சிங் 2, ஸ்டார்க் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் போராடிய வெங்கடேஷ் ஐயரும் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 70 (52) ரன்கள் அடித்து பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா 169 ரன்கள் எடுத்து அசத்தியது. அதன் காரணமாக வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை கொல்கத்தா எடுத்தது.

இதையும் படிங்க: ஹிட்மேனுக்கு இப்படி ஒரு நிலையா? அதுக்கு செட்டாக மாட்டீங்க.. மும்பை அணியில் ரோஹித்துக்கு நேர்ந்த பரிதாபம்

மறுபுறம் பிளே ஆஃப் செல்வதற்கு நிச்சயம் வென்றாக வேண்டிய இந்த போட்டியில் ஆரம்பத்தில் அசத்திய மும்பை கடைசியில் கொஞ்சம் சுமாராக பந்து வீசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பும்ரா 3, நுவான் துசாரா 2, கேப்டன் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இப்போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை (51* விக்கெட்டுகள், வான்கடே மைதானத்தில்) பும்ரா படைத்துள்ளார்.

Advertisement