ஹிட்மேனுக்கு இப்படி ஒரு நிலையா? அதுக்கு செட்டாக மாட்டீங்க.. மும்பை அணியில் ரோஹித்துக்கு நேர்ந்த பரிதாபம்

Rohit Sharma Mi2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே மூன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 51வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் தடுமாறி வருகிறது.

எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இந்த போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மும்பை அணியில் முகமது நபிக்கு பதிலாக நமன் திர் சேர்க்கப்படுவதாக கேப்டன் பாண்டியா அறிவித்தார்.

- Advertisement -

பரிதாபமான ரோகித்:
அதை விட முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. குறிப்பாக ஃபீல்டிங் துறையில் ரோஹித் சர்மா கொஞ்சம் மெதுவாக செயல்படுவதாக ஏற்கனவே விமர்சனங்கள் காணப்படுகின்றன.

எனவே இந்த வாழ்வா – சாவா போட்டியில் ஃபீல்டிங் செய்வதற்கு நீங்கள் செட்டாக மாட்டீர்கள் என்ற வகையில் மும்பை நிர்வாகம் அவரை இம்பேக்ட் வீரராக மட்டும் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்த போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் மட்டுமே செய்வார் என்பது பல மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் சீனியர் என்று பார்க்காமல் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் இப்போது வரை தங்களுடைய கேப்டன் என்று பார்க்காமல் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராக மட்டுமே தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த 2 திறமையை மீண்டும் மீண்டும் நிரூப்பிச்சும் நடராஜனை செலக்ட் பண்ணாதது ஆச்சர்யம்.. வாட்சன் அதிருப்தி

இதை பார்க்கும் ரசிகர்கள் கடந்த வருடம் வரை மும்பை அணியின் முதல் வீரராக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் போகிற போக்கை பார்த்தால் அடுத்த வருடம் அணியிலிருந்தே மொத்தமாக ரோஹித் சர்மாவை மும்பை கழற்றி விட்டு விடுவார்கள் போல என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement