அந்த 2 திறமையை மீண்டும் மீண்டும் நிரூப்பிச்சும் நடராஜனை செலக்ட் பண்ணாதது ஆச்சர்யம்.. வாட்சன் அதிருப்தி

Shane Watson
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சுமாரான ஃபார்மில் தவிக்கும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதே போல இளம் வீரர் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் பட்டியலில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதை விட தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட இடம் பெறாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையில் இந்தியாவுக்காக தேர்வாகியுள்ள முகமது சிராஜ் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் சுமாரான ஃபார்மில் அதிக எக்கனாமியில் பந்து வீசி வருகின்றனர்.

- Advertisement -

வாட்சன் கருத்து:
ஆனால் அவர்களை விட ஹைதராபாத் அணிக்காக நடராஜன் குறைந்த எக்கனாமியில் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் 50 போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பும்ராவை முந்தி முதலிடத்தை பிடித்த அவர் ஊதா தொப்பியை தன்வசமாக்கினார். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது நடராஜனின் கூடுதல் சிறப்பாகும்.

இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இணைக்கவில்லை. இந்நிலையில் நடராஜன் இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்காதது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஷேன் வாட்சன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் நல்ல வேரியஷன் மற்றும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் 2 திறமை நடராஜனிடம் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி வாட்சன் ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “அவரிடம் அந்த யார்க்கர் பந்துகளை வீசும் திறன் இருக்கிறது. அவரிடம் பந்து வீச வேண்டிய போது வேகத்தில் வேரியேசன்கள் இருக்கிறது. அதை அவர் மீண்டும் மீண்டும் செய்து வருகிறார். அதனால் தான் அவர் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

இதையும் படிங்க: தேங்க்ஸ் மஹி பாய்.. அதுக்காக காத்திருக்கேன்.. சிஎஸ்கே’வை விட்டு பிரியும் முஸ்தபிசூர் நெகிழ்ச்சி பதிவு

“குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக்கூடிய முக்கியமான கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் சிறப்பாக செயல்படும் போது இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று கூறினார். மொத்தத்தில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இல்லாததால் வேறு யாராவது காயத்தை சந்தித்தால் கூட நடராஜனுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement