தேங்க்ஸ் மஹி பாய்.. அதுக்காக காத்திருக்கேன்.. சிஎஸ்கே’வை விட்டு பிரியும் முஸ்தபிசூர் நெகிழ்ச்சி பதிவு

Mustafizur Rahman 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது அதில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளார். இந்த வருடம் சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 9.26 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் அவர் சென்னை இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

தோனிக்கு நன்றி:
குறிப்பாக பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றியதை மறக்க முடியாது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் விரைவில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக வங்கதேசம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. எனவே அதில் பங்கேற்பதற்காக அவர் சென்னை சென்னை அணியிலிருந்து விலகி நாடு திரும்ப உள்ளார்.

இந்நிலையில் நாடு திரும்புவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியிடம் அவர் கையொப்புமிட்ட ஜெர்ஸியை பரிசாக வாங்கியுள்ளார். மேலும் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை பெற்றதை எப்போது மறக்க முடியாது என்றும் தோனிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் முஸ்தபிசூர் ரஹ்மான் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“அனைத்திற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஒரு ஜாம்பவானுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டது ஸ்பெஷலான உணர்வை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு மிகவும் நன்றி. உங்களுடைய மதிப்புமிக்க ஆலோசனையை பாராட்டுகிறேன். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்”

இதையும் படிங்க: நடராஜனை இந்திய அணியில் சேர்க்காததுக்கு இதுதான் காரணமா? சப்பை கட்டு காட்டும் பி.சி.சி.ஐ – ரசிகர்கள் ஏமாற்றம்

“உங்களை விரைவில் மீண்டும் சந்தித்து உங்களுடன் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் ரோஹித் சர்மா ரன் எடுக்க ஓடும் போது ரஹ்மான் குறுக்கே வந்தார். அதற்கு பதிலடியாக தோனி வேண்டுமென்றே அவரை இடித்து தள்ளியது இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட தோனியுடன் ஐபிஎல் தொடரில் அவர் இணைந்து விளையாடியது ரசிகர்களால் மறக்க முடியாத தருணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement