நடராஜனை இந்திய அணியில் சேர்க்காததுக்கு இதுதான் காரணமா? சப்பை கட்டு காட்டும் பி.சி.சி.ஐ – ரசிகர்கள் ஏமாற்றம்

Nattu
- Advertisement -

இந்தியாவில் தற்போது 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அடுத்ததாக ஜூன் 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ள வேளையில் இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஏற்கனவே அறிவித்து விட்டனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் அறிவித்தது.

- Advertisement -

அதில் குறிப்பிடத்தக்க சில நிராகரிப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2024 தொடரில் 6 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக இருக்கும் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் சிறப்பாக செயல்பட்டும் நடராஜனை மட்டும் நிராகரிப்பது ஏன்? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அதன்படி வெளியான தகவலில் பி.சி.சி.ஐ நடராஜனுக்கு வாய்ப்பு வழங்காதது பற்றி ஏற்றுக் கொள்ள முடியாத சில கருத்துக்களை முன் வைத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமான நடராஜன் அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் தொடர முடியாமல் போனார்.

- Advertisement -

மேலும் அவ்வப்போது அவர் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தாலும் காயம் அவரை தொடர்ந்து வந்ததாலேயே இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் அட்டகாசமாக செயல்பட்டு வந்தாலும் இதற்கு முன்னதாகவும் அவர் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ச்சியாக அவர் விளையாடவில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி பி.சி.சி.ஐ அவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : எல்லாமே இருக்கு.. 2024 டி20 உலகக் கோப்பை இந்தியா ஜெயிக்கும்.. குமார் சங்ககாரா சொல்லும் 2 காரணம்

தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசியும் காயத்தை காரணம் காட்டி தமிழக வீரரான நடராஜனை வேண்டுமென்றே பிசிசிஐ நிராகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement