எல்லாமே இருக்கு.. 2024 டி20 உலகக் கோப்பை இந்தியா ஜெயிக்கும்.. குமார் சங்ககாரா சொல்லும் 2 காரணம்

Kumar Sangakkara 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அசத்தி வரும் நடராஜன் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வைத்துள்ளார்.

ஆனால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழு சிராஜ், அர்ஷிதீப் சிங் போன்ற சுமாரான ஃபார்மில் உள்ள வீரர்களை சேர்த்துள்ள தேர்வு செய்துள்ளது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போக மும்பை அணியில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாரான ஃபார்மில் தவித்து வரும் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லும்:
அதனால் இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று பல இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களும் தரமான ஸ்பின்னர்களும் போதுமான அளவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். எனவே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் எதிரணியை சாய்ப்பதற்கான கலவை இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வெஸ்ட் இண்டீஸில் காலசூழ்நிலை எப்படி இருக்கும் என்பது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிடுக்கு தெரியும் என்றும் சங்கக்காரா கூறியுள்ளார். அதற்கு தகுந்தார் போல் அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் 2024 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த அணி மிகவும் வலிமையாக இருக்கிறது”

- Advertisement -

“அவர்கள் தங்களுடைய பேட்டிங்கை பூர்த்தி செய்துள்ளனர். ஆல் ரவுண்டர்களை பெற்றுள்ளனர். உயர்தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ளனர். அதனால் விளையாடுவதற்கு தகுந்த மிகச் சிறந்த கலவையை அவர்கள் பெற்றுள்ளார்கள். அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி கோப்பையை வெல்வதற்கு எம்மாதிரியான அணி தேவை என்பது ரோஹித் மற்றும் டிராவிட்டுக்கு தெரியும்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறி இலங்கைக்கு பறந்த பதிரானா மற்றும் தீக்ஷனா – காரணம் என்ன தெரியுமா?

“அவர்களிடம் 2 முதல் 3 கலவையை உருவாக்குவதற்கு தேவையான அணி இருக்கிறது. குறிப்பாக ஆழமான பேட்டிங் வரிசை அல்லது வலுவான பவுலிங் வரிசை கொண்ட அணி தேவைப்பட்டால் அதை அவர்களால் உருவாக்க முடியும். அந்த வகையில் இந்திய அணி மிகவும் சமநிலையுடன் இருக்கிறது. மேலும் இந்தியா எப்போதுமே சர்வதேச தொடர்களில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

Advertisement