ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இனிவரும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி அடையும் என்கிற இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பவுலர்கள் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியின் போது துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக விளையாட முடியாமல் போனது.
அதேபோன்று தீபக் சாஹரும் ஒரு சில பந்துகள் வீசிய உடனே காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். மேலும் பதிரானாவிற்கும் தசைப்பிடிப்பு இருந்ததால் அவரும் அந்த போட்டியில் விளையாடவில்லை. அதனால் சென்னை அணி பெரிய சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் அடுத்ததாக சென்னை அணி விளையாட இருக்கும் போட்டியின் போது மேலும் சில பந்துவீச்சாளர்கள் இடம்பெற முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் சென்னை அணியில் இடம் பிடித்திருந்த இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தற்போது சென்னை அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இலங்கைக்கு சென்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் அவர்கள் விளையாட இருப்பதினால் பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காகவே அவர்கள் அங்கு சென்று இருக்கிறார்கள் என்றும் எனவே அடுத்த போட்டியில் அவர்களால் சென்னை அணியில் இடம்பிடித்து விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நண்பேன்டா.. இது தெரியாம ரசிகர்கள் அடிச்சுக்குறாங்க.. 2021இல் கோலி செஞ்சதை திரும்பிக் கொடுத்த ரோஹித்
மேலும் அந்த ஒரு போட்டிக்கு பிறகு மீண்டும் வந்து சென்னை அணியுடன் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது ஏற்கனவே சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்தடுத்து தற்போது நான்கு தோழர்கள் விளையாட முடியாத சூழலில் சென்னை அணி அடுத்த போட்டியில் எவ்வாறு இந்த சிக்கலை சமாளிக்க போகிறது என்பதை பலர் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது