6 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் இடம் பிடித்த ரிஷி தவான் – அதற்காக அவர் பட்ட கஷ்டம் என்ன தெரியுமா?

rishi 2
- Advertisement -

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த இந்திய அணியின் வீரரான ரிஷி தவான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஷிவம் துபே மற்றும் தோனி ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2016 வரை 25 போட்டிகளில் விளையாடி இருந்தார்.

PBKS vs CSK Rishi Dhawan

- Advertisement -

அதோடு 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஒரு ஆல்-ரவுண்டராக விளையாடி இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரது மோசமான பார்ம் காரணமாக தொடர்ச்சியாக இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் இடம்பெறாமல் இருந்து வந்தார். அப்போது வெறும் 26 வயது மட்டுமே நிரம்பி இருந்த ரிஷி தவான் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தாலும் தான் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகவில்லை என்று கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தனது போராட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

தற்போது 32 வயதாகும் அவர் நடைபெற்று முடிந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் ஹிமாச்சல பிரதேச அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்திய அவர் தனி ஒருவனாக அந்த அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இதன்காரணமாக நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் நிச்சயம் இவர் ஏதாவது ஒரு அணியில் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 55 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

rishi 1

இந்நிலையில் அவரது இந்த ஐபிஎல் வருகை குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் : கடந்த பல ஆண்டுகளாகவே நான் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கும் விளையாடாமல் இருந்ததால் மனதளவில் அழுத்தத்தில் இருந்தேன். இருப்பினும் நிச்சயம் என்னால் மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்று உறுதியாக எண்ணி கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன். அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக நிச்சயம் நான் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

- Advertisement -

அதன் காரணமாக நடைபெற்று முடிந்த ரஞ்சி தொடரில் எனது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினேன். அந்த வகையில் எனக்கு பஞ்சாப் அணியில் வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய போட்டியில் நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய போது சற்று பதட்டமாகவே இருந்தது. ஏனெனில் நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாட இருந்ததால் எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது. ஆனாலும் எனது அனுபவம் காரணமாக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் என்னுடைய அற்புதமான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்தினேன் என்று அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : 3 ஆண்டுகளாக டெத் ஓவர்களில் சைலன்ட் கிங்காக வலம் வரும் இளம் இந்திய வீரர் – ரசிகர்கள் வியப்பு

பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் இடம் பெறாமல் இருந்தாலும் தனது விடா முயற்சியின் மூலம் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். அதோடு நேற்றைய போட்டியில் அவர் பந்துவீச்சின் போது வித்தியாசமான முக கவசம் அணிந்து இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதற்கு காரணம் யாதெனில் ரஞ்சி தொடரின் போது பந்து அவரது முகத்தில் பட்டு மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் மேலும் காயம் பெரிதாக கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அந்தப் பாதுகாப்பு கவசத்தை அணிந்து விளையாடினார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement