3 ஆண்டுகளாக டெத் ஓவர்களில் சைலன்ட் கிங்காக வலம் வரும் இளம் இந்திய வீரர் – ரசிகர்கள் வியப்பு

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற 38-வது போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை தோற்கடித்த பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து பங்கேற்ற 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187/4 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் சக வீரர் பனுக்கா ராஜபக்சா உடன் இணைந்து அதிரடியாக 110 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே பஞ்சாப்பை முன்னிலைப் படுத்தினார்.

Shikar Dhawan

- Advertisement -

அதில் ராஜபக்சா 42 (32) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் தொடர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் சென்னைக்கு தொல்லை கொடுத்த ஷிகர் தவான் அதிரடியாக 9 பவுண்டரி 2 சிக்சருடன் 88* ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 188 என்ற இலக்கை துரத்திய சென்னை எவ்வளவோ போராடியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176/6 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது தோல்விகளை பதிவு செய்து அந்த அணி லீச் சுற்றுடன் வெளியேறியது உறுதியாகிவிட்டது.

தண்ணி காட்டிய அர்ஷிதீப்:
முன்னதாக இப்போட்டியில் 188 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு ராபின் உத்தப்பா 1 (7) மிட்செல் சான்ட்னர் 9 (15) ஷிவம் டுபே 8 (7) போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 40/3 என தடுமாறியபோது களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு சக வீரர் ருதுராஜ் உடன் இணைந்து 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த தனது அணியை மீட்டெடுக்க போராடிய நிலையில் ருதுராஜ் 30 (27) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

CSK vs PBKS

இருப்பினும் அதன்பின் இரட்டை மடங்கு அதிரடி காட்டிய அம்பத்தி ராயுடு 7 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்டு 78 ரன்கள் எடுத்து போராடினார். ஒரு கட்டத்தில் கடைசி 24 பந்துகளில் வெற்றிக்கு 47 ரன்கள் என்ற நிலைமையாலும் ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்த காரணத்தாலும் சென்னை போராடி வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்போது 17-வது ஓவரை வீசிய பஞ்சாப் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் 1, 1, 1, 0, 1, 2 என ராயுடு மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராக அற்புதமாக பந்து வீசியது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதற்கடுத்த ஓவரில் ரபாடாவிடம் ராயுடு அவுட்டானது மேலும் திருப்புமுனை ஏற்படுத்திய நிலையில் முக்கியமான 19-வது ஓவரை தரமான எம்எஸ் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராக வீசிய அர்ஷிதீப் சிங் 1, 0, 1, 1, 4, 1 என 8 ரன்கள் மட்டுமே கொடுத்து சென்னையை பெரிய அளவில் ரன்கள் எடுக்க விடாமல் தோல்வியடைய முக்கிய பங்காற்றினார்.

Arshdeep-singh

டெத் ஓவர் கிங்:
அந்த அளவுக்கு தோனி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்திய அவரின் திறமையை பார்த்த அதே அணியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா “அர்ஷிதீப் சிங் பஞ்சாப் அணியில் இருக்கும் பவுலர்களில் சிறந்த டெத் பவுலர்” என்று போட்டி முடிந்த பின் பாராட்டினார். இது மட்டுமல்லாமல் இந்த வருட ஐபிஎல் தொடரில் கடைசி கட்ட ஓவர்களான 16 – 20 ஓவர்களில் தொடர்ந்து பந்து வீசி வரும் இவர் 1 போட்டியில் கூட ஒரு ஓவரில் 9 ரன்களுக்கு மேல் வழங்கியதில்லை.

- Advertisement -

அதைவிட இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் டெத் ஓவர்கள் எனப்படும் கடைசி கட்ட 16 – 20 வரையிலான ஓவர்களில் அசத்தலாக பந்துவீசிய இவர் 1 சிக்சர் கூட வழங்கியதில்லை என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இதுமட்டுமல்லாமல் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் ஒவ்வொரு வருடத்திலும் அவர் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

arshdeep

1. ஏனெனில் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் அவர் முதல்முறையாக அறிமுகமான வருடத்தில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை 10.90 என்ற எக்கனாமியில் எடுத்தார். அதன்பின் 2020இல் 8 இன்னிங்ஸ்சில் 9 விக்கெட்களை 8.77 என்ற எக்கனாமியில் எடுத்தார்.

- Advertisement -

2. அதை மிஞ்சும் வகையில் 2021இல் 12 இன்னிங்ஸ்சில் 18 விக்கெட்களை 8.27 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்த வருடம் 8 இன்னிங்ஸ்சில் 3 விக்கெட்களை 8.00 என்ற மிகச் சிறப்பான எக்கானமியில் எடுத்து ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறார்.

arshdeep 1

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வெறும் பேக் அப் பவுலராக இருந்த அவர் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் அபாரமாக செயல்பட்ட காரணத்தால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் மீண்டும் தக்க வைத்தது.

இதையும் படிங்க : சொதப்பிய சென்னை! காயத்துடன் தனி சிங்கமாய் போராடிய முக்கிய வீரர் – குவியும் பாராட்டு

அந்த நம்பிக்கையை தனது மிகச் சிறப்பான பந்துவீச்சால் காப்பாற்றி வரும் அர்ஷிதீப் சிங் சமீபகாலங்களில் சத்தமில்லாமல் டெத் ஓவர்களில் கிங் பவுலராக வளர்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

Advertisement