ராஜஸ்தான் தோல்வியால் ஸ்ரேயாஸ் ஐயர் அபார சாதனை.. கங்குலி, யுவிக்கு நிகராக சாம் கரண் வரலாற்று சாதனை

Sam Curran and Shreyas
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. கௌகாத்தி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் வெறும் 145 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 48, அஸ்வின் 28 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் 2, ஹர்ஷல் படேல் 2, ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ, சசாங் சிங் போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய கேப்டன் சாம் கரண் 63* (41) ரன்கள் அடித்து 18.5 ஓவரில் பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சாதனை கேப்டன்கள்:
அதன் காரணமாக ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தவற விட்ட பஞ்சாப் ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் பிளே ஆஃப் தகுதி பெற்றும் சொதப்பிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வியால் ஏற்கனவே 13 போட்டியில் 19 புள்ளிகளை பெற்றிருக்கும் கொல்கத்தா அதனுடைய கடைசி போட்டியில் தோற்றாலும் முதலிடத்தை பிடிப்பது 100% உறுதியாகியுள்ளது.

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து கொல்கத்தா அணி அசத்தியுள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த முதல் கொல்கத்தா கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முன் கௌதம் கம்பீர், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் கூட இந்த சாதனையை படைத்ததில்லை.

- Advertisement -

மறுபுறம் பஞ்சாப் அணிக்கு இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் மற்றும் 63 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய கேப்டன் சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஷிகர் தவான் காயத்தை சந்தித்ததால் இந்த சீசனில் பெரும்பாலும் கேப்டனாக விளையாடிய அவர் முந்தைய போட்டிகளில் சுமாராக செயல்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் ஆல்ரவுண்டராக அசத்திய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 2+ விக்கெட்டுகள் எடுத்த 5வது கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அவரை முன்னாடியே யூஸ் பண்ணிருக்கனும்.. வருங்காலம் எங்களோடது தான்.. ஆட்டநாயகன் சாம் கரண் பேட்டி

அந்த பட்டியல்:
1. சௌரவ் கங்குலி (கொல்கத்தா) : 91 மற்றும் 2/25, டெக்கான் சார்ஜஸ்க்கு எதிராக, 2008
2.யுவராஜ் சிங் (பஞ்சாப்) : 50 மற்றும் 3/22, பெங்களூருக்கு எதிராக, 2009
3. யுவராஜ் சிங் (புனே) : 66* மற்றும் 4/29, டெல்லிக்கு எதிராக, 2011
4. ஜேபி டுமினி (டெல்லி) : 54 மற்றும் 4/17, ஹைதராபாத்துக்கு எதிராக, 2015
5. சாம் கரண் (பஞ்சாப்) : 63* மற்றும் 2/24, ராஜஸ்தானுக்கு எதிராக, 2024*

Advertisement