அவரை முன்னாடியே யூஸ் பண்ணிருக்கனும்.. வருங்காலம் எங்களோடது தான்.. ஆட்டநாயகன் சாம் கரண் பேட்டி

Sam Curran 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. கௌகாத்தி நகரில் மே 15ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் சுமாராக விளையாடி 145 ரன்களை மட்டுமே இலக்காக கொடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 48, ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் சாம் கரண் 63* (41), ஜிதேஷ் சர்மா 22, ரிலீ ரோசவ் 22 ரன்கள் எடுத்தனர். அதனால் 18.5 ஓவரிலேயே இலக்கை தொட்ட பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறினாலும் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஒளிமயமான எதிர்காலம்:
மறுபுறம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சஹால் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. பஞ்சாபின் இந்த வெற்றிக்கு 63 ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் நேதன் எலிஸை தாங்கள் முன்கூட்டியே பயன்படுத்திருக்க வேண்டும் என்று சாம் கரண் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிராக 263 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்தது உட்பட இந்த சீசனில் நிறைய நேர்மையான பாடங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே வருங்காலங்களில் பஞ்சாப் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அணியாக நாங்கள் நன்றாக பந்து வீசினோம். இன்று பெருமையுடன் விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய செய்தியாகும்”

- Advertisement -

“இந்த சீசனில் முதல் முறையாக விளையாடிய எலிஸ் அற்புதமாக செயல்பட்டார். அவரை முன்கூட்டியே பயன்படுத்தியிருக்க வேண்டும். பிட்ச் கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று பேர்ஸ்டோ சொன்னதால் அதிகம் ரிஸ்க் எடுக்கவில்லை. இது போன்ற மைதானத்தில் சில சிக்சர்கள் போதும் என்பது தெரியும். நானும் பேர்ஸ்டோவும் உலகக் கோப்பைக்காக நாளையுடன் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறோம்”

இதையும் படிங்க: 48/4 என சரிந்தும் அடங்க மறுத்த பஞ்சாப்.. ராஜஸ்தானின் குவாலிபயர் கனவை காலி செய்த பரிதாபம்?

“உலகக் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த வருடம் நாங்கள் நிறைய போட்டிகளில் நெருங்கி தோல்வியை சந்தித்தோம். எனவே வருங்காலத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கு தெரியும். கொல்கத்தாவில் செய்த சேசிங், சசாங் சிங் – அசுடோஸ் ஆகியோர் அணிக்காக விளையாடிய விதம் போன்றவை எங்களுக்கு அற்புதமாக அமைந்தது. ஹர்ஷல், அர்ஷிதீப் நன்றாக பந்து வீசினர்” என்று கூறினார்.

Advertisement