48/4 என சரிந்தும் அடங்க மறுத்த பஞ்சாப்.. ராஜஸ்தானின் குவாலிபயர் கனவை காலி செய்த பரிதாபம்?

PBKS vs RR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு கெளஹாத்தியில் 65வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 18 ரன்னில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய கோலர்-கேட்மோர் 18 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 42/3 என ராஜஸ்தான் தடுமாறிய ரியான் பராக் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடி காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின் 28 (19) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 0, ரோவ்மன் போவல் 4, பெரீரா 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

தடுமாறும் ராஜஸ்தான்:
இறுதியில் ரியான் பராக் 48 (34) ரன்களும் ட்ரெண்ட் போல்ட் 12 (9) ரன்களும் எடுத்ததால் 20 ஓவரில் ராஜஸ்தான் 144/9 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 145 ரன்களை சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த ரிலீ ரோசவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 22 (13) ரன்களில் அவுட்டானார்.

அப்போது அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசாங் சிங் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு எதிர்புறம் தடுமாறிய ஜானி பேர்ஸ்டோ 14 (22) ரன்களில் அவுட்டானதால் 48/4 என பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஆனால் அப்போது களமிறங்கிய கேப்டன் சாம் கரண் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த ஜிதேஷ் சர்மா 22 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய சாம் கரண் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 63* (41) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் அசுடோஸ் சர்மா 17* (11) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே 145/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் 5 கிரிக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய பஞ்சாப் இப்போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் சேர்த்து கடைசி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் ஹைதராபாத் அணி அதனுடைய கடைசி 2 போட்டியில் வெல்லும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவரால் மட்டும் முடியாது.. உ.கோ ஜெயிக்க ஐபிஎல் மாதிரி.. நாமன்னு நினைங்க.. இந்தியாவுக்கு ஹர்பஜன் அட்வைஸ்

ஆனால் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ஹைதெராபாத்தை (+0.406) விட குறைந்த ரன்ரேட் (+0.273) கொண்டுள்ளது. அதனால் கடைசிப் போட்டியில் வென்றாலும் ராஜஸ்தான் டாப் 2 இடத்தை பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement