அவரால் மட்டும் முடியாது.. உ.கோ ஜெயிக்க ஐபிஎல் மாதிரி.. நாமன்னு நினைங்க.. இந்தியாவுக்கு ஹர்பஜன் அட்வைஸ்

Harbhajan Singh 8
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடரிலாவது இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருக்கும் இந்தியா லீக் சுற்றில் சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டியில் தோல்வியை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு ஒவ்வொரு வருடமும் ஐசிசி தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதனால் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடும் இந்திய வீரர்கள் ஐசிசி தொடருக்கு தயாராக முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவது தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைகிறது. இந்நிலையில் சுமார் 2 மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் தொடரால் வீரர்கள் சோர்வடைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் மாதிரி:
எனவே ஐபிஎல் தொடரை போல நினைத்துக் கொண்டு தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பையிலும் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா போன்ற ஒருவரால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ரோகித் சர்மாவால் மட்டும் தனி ஒருவனாக கோப்பையை வெல்ல முடியாது. எனவே வெற்றி என்பது நான் என்று நினைக்கும் போது வராது. நாம் என்று நினைக்கும் போது மட்டுமே வரும். அதனால் நாம் என்று நினைத்து விளையாடும் போது உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஐபிஎல் சோர்வை ஏற்படுத்தக்கூடிய தொடராகும். ஏனெனில் நீங்கள் அதிகமாக பயணிக்க வேண்டியதால் சோர்வடைவீர்கள்”

- Advertisement -

“ஐபிஎல் தொடரால் வீரர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் சோர்வடைவார்கள். எனவே அவர்கள் உலகக் கோப்பையையும் ஐபிஎல் தொடரின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும். உலகக் கோப்பையை விட பெரியது எதுவும் இருக்க முடியாது. அங்கே நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அங்கே சிறப்பாக பந்து வீசி பேட்டிங் செய்து ஃபீல்டிங் செய்ய வேண்டும். உலகக் கோப்பையை வெல்வது எளிதானதல்ல. அதற்கு நீங்கள் மனதளவிலாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 1125 தாண்டிய சிக்ஸர் மழை.. 2024 ஐபிஎல் தொடர் பிரம்மாண்ட சாதனை.. வெளியேறிய பஞ்சாப்பிடம் திணறிய ராஜஸ்தான்

“உலகக் கோப்பை மைதானங்கள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே பயிற்சி போட்டிகள் தான் உங்களுடைய அணியின் கலவைக்கான அடிப்படை ஐடியாவை கொடுக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ரோகித் சர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடத் தவறினர். அதுவே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement